ஸ்ரீ காட்டழகர் கோவில்../ ஆன்மிக உலா/ஜெயந்தி சதீஷ்,
ஸ்ரீ காட்டழகர் கோவில்..
ஜெயந்தி சதீஷ், அவர்கள் வழங்கும் இன்றைய ஆன்மிக உலாவில்
ஸ்ரீ காட்டழகர் கோவில்..
*பீப்பிள் டுடே வாசகர்கள்* அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏
இந்த முறை நாம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்திருக்கும் ஓர் அழகான வன பகுதியல் இருக்கும் கோவிலை பற்றி பார்க்க இருக்கிறோம்..
வன பகுதியில் கோவிலா? எப்படி செல்வது? போன்றவற்றை பார்ப்போமா..
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் இருக்கிறது ஸ்ரீ காட்டழகர் கோவில்..
சனி, ஞாயிற்று கிழமை மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி..
ஸ்ரீவில்லபுத்தூரில் இருந்து சனி மற்றும் ஞாயிற்று கிழமை பேருந்துகள் இயக்கப்படுகின்றன..
செண்பகத்தோப்பு என சொல்லப்படும் பகுதி வரை மட்டுமே பேருந்தில் செல்ல முடியும்.. அதன் பின் 6 கி.மீ நடை பயணமாக தான் செல்ல வேண்டும்..
ஆன்மீக சுற்றுலா என சொல்வதை விட குடும்பமாக, நண்பர்கள் என குழுவாக செல்வோருக்கு நிச்சயம் நல்லதோர் பயண அனுபவமாக அமையும்..
ஆற்றை கடந்து செல்ல வேண்டும்..
வன பகுதி என்பதால் பச்சை பசேல் என மரங்கள், கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கும்.. அடர்ந்த வன பகுதி என்பதால் குழந்தைகள் விளையாடி மகிழ்ச்சியாக செல்லலாம்..
வழி நடுவே கண்ணிற்கு விருந்தாக சாம்பல் நிற பெரிய அணில்களை காணலாம்..
வன பகுதி கோவில் என்பதால் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது..
நீங்கள் செல்லும் சமயம் ஓடையில் தண்ணீர் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியக அமையும் உங்கள் பயணம்..
புகைப்பட பிரியர்களுக்கு சிறந்த வனபகுதி செண்பகத்தோப்பு பகுதி..அழகு அழகான புகைப்படங்கள் எடுக்கலாம்..
சரி.. எப்படி செல்வது என பார்த்தாயிற்று.. இனி கோவிலின் வரலாற்றை சற்று தெரிந்து கொள்வோமா??
திருக்கோவில் பற்றி அறிந்து கொள்வதற்காக திருக்கோவில் அர்ச்சகர் திரு.முத்தாக்குட்டி ஐயங்கார் அவர்களை சந்தித்து கோவிலை பற்றி *நம் பீப்பிள் டுடே வாசகர்கள்* தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கேட்டோம்..
வன பகுதியில் நடுவில் ஸ்ரீ சுந்தரவள்ளி, ஸ்ரீ சௌந்தரவள்ளி தாயார் சமேத ஸ்ரீ காட்டழகர் கோவில் கொண்டிருக்கிறார்..
கோவிலின் வாசலில் தர்மராஜன் என சொல்லப்படும் ஸ்ரீ கருப்பண்ணசாமி அமைந்தருக்கிறார்..
ஸ்ரீ காட்டழகர் கோவில் விமானம் " சோம சுந்தர விமானம்" ..
ஸ்ரீ காட்டழகரை தரிசிக்க நடந்து வரும் வழியில் வன பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அமைந்திருக்கும் சொக்கன் பாறையில் ஸ்ரீ காட்டழகர் வலது கால் பதிந்ந தடத்தை இன்றளவும் காணலாம்..
இக்கோவிலின் சிறப்பு வேண்டிய வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக ஸ்ரீ காட்டழகர் இருக்கிறார்..
காட்டுக்குள் இருந்து ஆட்சி புரியும் ஸ்ரீ காட்டழகரிடம் மனதாற ப்ராரதித்து வேண்டினால் நினைத்தது நடக்கும் என்கின்றார்கள் இப்பகுதி மக்கள்..
இக்கோவிலுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே அனுமதி.. சித்திரை விசு, பௌர்ணமி , கருப்பண்ண சாமி பொங்கல் போன்ற சிறப்பு விழாக்காலங்களில் அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்..
மற்ற நாட்களில் செல்ல வேண்டுமானால் சிறப்பு அனுமதி பெற வேண்டும் ..
திருக்கோவிலின் படிக்கட்டுகள் தமிழ் எழுத்துக்களான 247 எழுத்துக்களையும் குறிக்கும் வகையில் 247 படிகள் அமைந்துள்ளது
இங்கு செல்ல விரும்புவோர் திருக்கோவில் அர்ச்சகரை தொடர்பு கொண்டு சென்றால் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்
*செல்: 9245400616*
மேலும் நிறைய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
#ஜெயந்தி சதீஷ்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
Comments