உருளைக் கிழங்கு கத்தரிக்காய் சட்னி

 கரண்ட் இல்லாத சமயத்துல ஒரு வாட்டி இந்த சட்னி ட்ரை பண்ணி பாருங்க. வித்தியாசமாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும்.




வித்தியாசமான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சட்னி எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குக்கரில் 5 விசில் வைத்தால், வேலை முடிந்துவிடும். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள சூப்பர் சைட் டிஷ்.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, தோலுரித்த பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வர மிளகாய் – 4, தோலுரித்த சின்ன வெங்காயம் – 12 பல், மீடியம் சைஸ் தக்காளி பொடியாக நறுக்கியது – 1, புளி சிறிய பின்ச், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் நன்றாக வதக்கி விட வேண்டும்.


அடுத்தபடியாக மீடியம் சைஸில் இருக்கும் உருளைக்கிழங்கு தோல் சீவி வெட்டியது – 1, சிறிய துண்டுகளாக வெட்டிய கத்தரிக்காய்கள் – 3, இந்த இரண்டு காய்களையும் குக்கரில் சேர்த்து 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, குழம்புக்கு தேவையான அளவு உப்பு தூவி, இரண்டு நிமிடம் போல இந்த காய்கறிகளை வதக்கி விட வேண்டும்.


அதன் பின்பு 1/2 கப் அளவு தண்ணீரை குக்கரில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி 5 விசில் விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.


குக்கர் விசில் வரும் போதே நமக்கு மணமான வாசம் வீசும். குக்கர் பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு கரண்டியை வைத்து மசித்துக் கொடுத்தாலே இந்த பொருட்கள் எல்லாம் ஒன்றும் இரண்டுமாக மசிந்து விடும். அப்படி இல்லை என்றால் மண்சட்டியில் இந்த கலவையை ஊற்றி கீரை கடைவது போல மத்தை வைத்து ஒன்றும் இரண்டுமாக மசித்து விட்டு அப்படியே பரிமாற வேண்டியது தான். சூப்பரான சைடிஷ் தயார்.


இந்த ரெசிபியை உருளைக் கிழங்கு கத்தரிக்காய் சட்னி என்றும் சொல்லலாம் அல்லது கடையல் என்றும் சொல்லலாம் அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த குறிப்பு புடிச்சிருக்கா. உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி