வருத்தம் தெரிவிக்காத சூர்யா

 


வருத்தம் தெரிவிக்காத பிடிவாதக்காரர் சூர்யா: ஏன் ஆதரிக்கிறீர்கள்? பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் கேள்வி



ஜெய்பீம் சர்ச்சை எழுந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் மோதல்கள் நடந்து வருகிறது. பாமகவினர் கோபம் அதனால் வழக்குகள், புகார்கள் என ஒருபக்கம், அன்புமணி ராமதாஸ் கடிதம் அதற்கு சூர்யாவின் பதில், சூர்யாவுக்கு ஆதரவாக அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுத அதற்கு அன்புமணி சூடாக பதிலளிக்க தற்போது இந்தப்பிரச்சினையில் தேவையில்லாமல் பாரதிராஜா சப்போர்ட் செய்வதாக தயாரிப்பாளர் எம்.10 புரடக்‌ஷன்ஸ் முருகராஜ் என்பவர் பாரதிராஜாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட இருளர் குடும்பம் போலீஸ் நரவேட்டையில் பாதிக்கப்படுவதும், அதற்கு ஆதரவாக வழக்கறிஞர் சந்துரு நிற்பதும் என உண்மைச் சம்பவத்தை தழுவி மாற்றங்களுடன் எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்தில் கொலைகார எஸ்.ஐக்கு வன்னியர் முத்திரை எப்படி குத்தலாம் என்று வன்னியர் சங்கத்தினர் கோபப்பட சூர்யா மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிற கோரிக்கையும் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

படத்தில் வைக்கப்பட்ட பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கியது படக்குழு ஆனால் மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது ரூ.5 கோடி இழப்பீடு என்று அனுப்பிய நோட்டீஸுக்கு சூர்யா பதிலளிக்கவில்லை. பின்னர் இந்தப்பிரச்சினையில் சூர்யாவுக்கு ஆதரவாக தெ இந்திய திரைப்பட சங்கம், நடைகர் சங்கத்துணை தலைவர் கருணாஸ், பாரதிராஜா, இயக்குனர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். பாரதிராஜா ஒருபடி மேலே போய் கடிதமே எழுதினார்

பாரதிராஜாவை விமர்சிக்கும் சமூக வலைதளங்கள்
 பாரதிராஜா இப்பிரச்சினையில் தலையிட்டதால் அவர் படவிழாவில் ஒரு சமூகத்தைப்பற்றி பேசியதையும் எடுத்துப்போட்டு விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பாரதிராஜாவை எம்.10 புரடக்‌ஷன்ஸ் முருகராஜ் என்பவர்கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார். மன்னிப்பு கேட்டால் பிரச்சினை ஓய்ந்துவிடும் ஆனால் வருத்தம் தெரிவிக்காத வறட்டு பிடிவாதக்காரர் சூர்யாவுக்கு சப்போர்ட் செய்து தேவையில்லாமல் தயாரிப்பாளர்களை இதில் இழுத்துவிடுகிறீர்கள் என கடுமையாக சாடியுள்ளார்
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு, வணக்கம், ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும் அதை சீர்குலைக்காமல் இருப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை. என்பதை வேதம் புதிது எடுத்த தலைவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.



நன்றி: https://tamil.oneindia.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,