லியோ டால்ஸ்டாய் நினைவு நாள்
லியோ டால்ஸ்டாய் நினைவு நாள் - நவம்பர் 20, 1910.
“அரசனின் வாளைவிடப் பேனா முனைக்கு வலிமை அதிகம்”. தமது பேனாவின் மூலம் சமுதாயத்தை மாற்றியவர்களுள் ஒருவரே லியோ டால்ஸ்டாய் ஆவார்.
இவர் ரஷ்யாவில் மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். எண்ணற்ற சிறுகதைகளையும் மிகச் சிறந்த புதினங்களையும் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் "போரும் அமைதியும்' என்ற நூலாகும். இந்நூலை எழுதி முடிக்க அவருக்கு ஏழு ஆண்டுகள் ஆயின.
இன்றளவும் ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய நூலாக அது கருதப்படுகிறது.
இவர் எழுதிய மற்றொரு காவியம் "அன்னா கரீனீனா' ஆகும். இந்நூல்களைப் படிப்பதன் மூலம் ரஷ்ய சமூகத்தின் பல்வேறு அம்சங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இவரது கதைகள் ஆழ்ந்த மனோதத்துவக் கொள்கைகளை வலியுறுத்துவதாக அமைந்தன.
டால்ஸ்டாய் மகாத்மா காந்தியையும் அவரது கொள்கைகளையும் பெரிதும் மதித்தார்! உலகப் பொதுமறையாம் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலைப் படித்து அதன் பெருமையை ரஷ்யர்களுக்கு விளக்கினார்!
இவர் ரஷ்யர்களுக்கு எழுத்தாளர் மட்டுமல்ல! தத்துவமேதை ஞானி மற்றும் தீர்க்கதரிசியும் ஆவார்!
Comments