மாரித்தேவன்/உமாசங்கர் கவிதைகள்
காற்றென்னும்,
தேரிலேறி,
கார்முகில் குதிரை பூட்டி
, மாரித்தேவன்
புவன உலா வரும் பொழுதில,
காத்திருந்து,
கண்மலர்கள்
பூத்திருந்த நிலமென்னும்
அழகு மயில்
, தன் பசிய தாவரத் தோகை விரித்து,
வரம் தா,
வரம் தா என ஆடிய
பரவச நடனத்தில்
உளம் கனிந்து,
முத்துக்களை
வாரி இறைக்கிறான்
, மழையென.
கவிதை மற்றும் புகைப்படங்கள்
Comments