தங்க முகக்கவசம்

 




கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவர் 5.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க முகக்கவசத்தை வாங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகிறது.

கொல்கத்தாவில் சந்தன் தாஸ் என்ற நகைக்கடைக்காரர், 108 கிராம் எடை தங்கத்தில் இந்த ஸ்பெஷல் மாஸ்க்கை தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு 5.70 லட்சம் ருபாய் என்று அவர் தெரிவிக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் இந்த நகைக்கடைகாரரின் புதிய மாஸ்குக்கு வரவேற்பும் இருக்கிறதாம். கோவிட்-19 பரவல் குறைந்துவிட்டாலும், முகக்கவசங்கள் அணிவது வழக்கமாகிவிட்டதால், பாதுகாப்பு கவசம் என்ற நிலையில் இருந்து ஆபரணம் என்ற நிலைக்கு மாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
கழுத்தில் செயில், விரல்களில் மோதிரம் போல், வாய்க்கு முகக்கவசம் என்பது இனி தங்கத்தில் அணியலாம் என செல்வந்தர்களை நினைக்க வைக்கத் தூண்டும் புதிய உத்தி இதுவாகவும் இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,