சர்வதேச மாணவர் தினம்

 நவம்பர் 17 ; சர்வதேச மாணவர் தினம்

👣
சர்வதேச மாணவர் நாள் (International Students' Day) என்பது உலகளாவிய மாணவர் எழுச்சியை நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியா வின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் சிதறடிக்கப்பட்டது.மேலும், போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதன் பின் செக்கொசிலவாக்கியா நாசிகளால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டது. இந்த தொடர் நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்ததை அடுத்து ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழியாக இந்த மாணவர் அமைப்பு உறுதி பெற்றதுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்