அன்பின் ஆடை/சகுந்தலா ஸ்ரீனிவாசன்
மேடு பள்ளமாக
வழுக்கி விழுகிறதென் அன்பு
எல்லா நிறத்திலேயும்
அன்பின் ஆடைகளை
வடிவமைத்து விட்டேன்
நீ உடுத்தியப்பின்
வரும் மழை உன்னை
நனைக்காது
கனவுக்கோப்பைகளில்
சொற்களையூற்றி
பருகும்போதெல்லாம்
நீயென் ஆண்தேவதையின் வாசம்..
பிரியாதிரு
என் உடலிலிருந்து
உயிர் மெழுகும் வரை...
Comments