*தனித்துப் போகிறான்!* **தனித்துப் போகிறான்!* *மனிதன்*

*தவிக்கப் போகிறான்!*


¶காலையில்  எழுப்பிட 

அப்பா வேண்டாம் 

- Alarm app இருக்கு!


¶நடைபயிற்சிக்கு 

நண்பன் வேண்டாம் 

- step counter இருக்கு!


¶சமைத்து தந்திட 

அம்மா வேண்டாம்  

- zomato, swiggy app இருக்கு!


¶பயணம் செய்ய 

பேருந்து வேண்டாம் 

- Uber,OLA app இருக்கு!


¶விலாசம் அறிய 

டீ கடைக்காரரும்,

ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்

-Google Map இருக்கு!


¶மளிகை வாங்க 

செட்டியார் தாத்தா கடைக்கும்,

அண்ணாச்சி கடைக்கும்

போக வேண்டாம் 

- Big Basket இருக்கு!


¶துணி, மணிகள் வாங்க

கடைத்தெரு போக வேண்டாம் 

-Amazon , Flipkart app இருக்கு!


¶நேரில் சிரித்து பேசிட

நண்பன் வேண்டாம் 

- What's up, facebook இருக்கு!


¶கைமாறாக பணம் வாங்க

பங்காளியும், அங்காளியும்

தேவையில்லை 

- Paytm app இருக்கு!


¶மற்றும் 

பல தகவலுக்கு நம்ம

-Google டமாரம் இருக்கு!


¶இப்படி தனித்து வாழ்ந்திட

அனைத்தும் இருக்கு.....

-App என்னும் ஆப்பு!!!


¶உள்ளங்கை நெல்லிக்கனியென

நீ நினைக்க!


¶விரித்திருப்பதோ மீள முடியாத

வலைதளம்.!

சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!


¶விழித்தெழு 

விடை கொடு..!


¶ செல்லின் அடிமைகளாய் இல்லாமல்

உறவுகளோடும் சேர்ந்து 

ஒரு வலை பின்னுவோம்...!


படித்ததில் பிடித்ததுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,