*பருத்த உடம்பையும் ஊசிபோல் மெலியச் செய்யும்

 *பருத்த உடம்பையும் ஊசிபோல் மெலியச் செய்யும் கருணைக்கிழங்கு....* கருணைக் கிழங்கு உடலுக்கு எந்த பிரச்சினையையும் தராது.  இருக்கின்ற பிரச்சினைகளை சரி செய்யும். 


கருணைக் கிழங்கு உடலில் எந்த நோயையும் தங்க விடாது.


கருணைக்கிழங்கு உடல் எடையை குறைக்கிறது. 


கருணைக்கிழங்கு நம்மை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.


*பயன்கள் ....*


ஜீரண சக்தி உண்டாகும்

உடல் எடையை குறைக்கும்

காய்ச்சல் மட்டுப்படும்


வெள்ளைப்படுதல் சரியாகும்

ஆசனவாய் பிரச்சினைகளை சரிசெய்கிறது

கல்லீரல் பலப்படும் 


 *ஜீரண சக்தி* 


கருணைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஜீரண மண்டலத்தின் இயக்கம் சீராகும். 


சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமடையும். 

அது மட்டுமல்லாது, உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் அமையும்.

   

 *உடல் பருமன்* 


உடல் பருமன் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பிரச்சினையாக இருக்கிறது.  இத்தகைய பிரச்சினைக்கு சிறந்த தீர்வுகளில் ஒன்றாக கருணைக்கிழங்கும் இருக்கும்.  

அடிக்கடி உணவில் கருணைக்கிழங்கை சேர்த்துக் கொண்டீர்கள் என்றால், உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து, உடல் பருமனைக் குறைக்கும். 


இந்த கருணைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் வன சூரணாதி சூரணம் தான் எடை குறைப்பதற்கான நாட்டு மருந்து....


*காய்ச்சல்*


உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கு கருணைக் கிழங்கு மிகவும் உதவி செய்கிறது. 

நாள்பட்ட காய்ச்சலைத் தீர்க்கும்.

   

 *வெள்ளைப்படுதல்*


பெண்களுக்கு இருப்பதிலேயே பெரிய பிரச்சினை என்றால், அது மாதவிடாய் சம்பந்தப்பபட்ட பிரச்சினைகள் தான்.  ஏனெனில் அதை மையமாக வைத்துதான் 

மற்ற எல்லா பிரச்சினைகளும் அவர்களுக்கு உண்டாகின்றன.  அந்த பிரச்சினைகளை எல்லாம் கருணைக்கிழங்கு சரிசெய்யும். குறிப்பாக, வெள்ளைப்படுதலைத் தடுப்பதில் கருணைக்கிழங்கு மிகத் தீவிரம் காட்டுகிறது.


*ஆசன வாய் பிரச்சினை*


மூல நோய் உள்ளவர்குள் உட்காருவதற்கு பெரும் துன்பப்படுவார்கள்.  அதிகப்படியான உடல் சூட்டின் காரணமாக இந்த பிரச்சினை உண்டாகிறது.  அப்படி மூலம் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு தினமும் கருணைக்கிழங்கை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். இது மூலத்தினால் உண்டாகும் சூடு, எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். 


சாப்பிட்டவுடன் தாகம் அதிகம் எடுக்கும்.  அந்த சமயங்களில் மோரைக் குடித்து வந்தால் மூலம் விரைவில் தீரும். ஆசன வாய் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளும் தீரும்.


*கல்லீரல் பலப்படும்*


கருணைக் கிழங்கை குறைந்தது வாரத்துக்கு இரண்டு முறையாவது உணவில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால், கல்லீரல் பலப்படும். புகைப்படித்தல், ஆல்கஹால் போன்றவற்றால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளைக் கூட சரிசெய்யும்._என்றும் உங்கள் உடல் நலனில் அக்கறையுள்ள_....


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை