ஸ்டாலினையே ஏமாத்திட்டாங்க

ஸ்டாலினையே ஏமாத்திட்டாங்க.. சூர்யாவுக்கு "குரு"பெயர்ச்சி சரியில்லை.. மீண்டும் கொந்தளிக்கும் பாமகதமிழக முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றி, அவரிடம் ரூ 1 கோடி கொடுத்தது போல் நடித்துள்ளார்கள்.. சூர்யாவிற்கு குருபெயர்ச்சி சரியில்லை... அவர் வன்னிய சமுதாயத்தினரையும், பாமகவினரையும் மோதவிட நினைக்கின்றார் என்று பாமக குற்றஞ்சாட்டி உள்ளது.
சில தினங்களாகவே ஜெய்பீம் விவகாரம் வெடித்து கிளம்பி வருகிறது.. பாமக இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. கடுமையான கண்டனங்களை விடுத்து வரும் நிலையில், பாமக தொண்டர்களும் சோஷியல் மீடியாவில் சூர்யாவுக்கு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் பிஎம்கே பாஸ்கரன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சொன்னதாவது:
எலிவேட்டை" என்கின்ற படத்தினை தயாரித்து, அந்த படத்திற்கு நேர்எதிர்மறையாக சித்தரித்து பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டிய நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் தயாரித்து இப்போது ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியிட்டுள்ளனர்.
இந்த திரைப்படம் ஓடிடி மூலம் வெளியிட்டிருப்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருந்தால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்... இல்லாத டிரஸ்ட்டிற்கு ஒரு போலியான அட்டை படத்தை காசோலை மூலம் காட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றி, அவரிடம் ரூ 1 கோடி கொடுத்தது போல் நடித்துள்ளார்கள்.

பாவம் தமிழக முதல்வரும், இவர்கள் நடித்த ஜெய்பீம் படத்தின் பின்னணி என்ன என்று கூட தெரியாமல், அவரும் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்... இந்த படத்தின் டைரக்டர் யாரோ ஒருவரை திருப்திப்படுத்த நினைத்து இந்த சினிமாவை எடுத்துள்ளார்... சூர்யா ஒரு சாதாரண நடிகர். நடிகர் என்றால் யார் என்ன வேடத்தில் நடிக்க சொல்கின்றாரோ, அந்த வேடத்தில் நடிக்க வேண்டும். ஆனால், நடிகர் சூர்யா தமிழக மக்களை ஏமாற்றி வேடம் போட்டு வருகின்றார். மேலும், நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது மனைவி ஜோதிகா மற்றும் குடும்பத்தினர் சம்பாதிக்கும் பணத்திற்கு முதலில் வரியை கட்டு.

ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் சீனில் நீ அந்த ஜாதியா, நீ இந்த ஜாதியா என்று ஜாதி, ஜாதியாக வகைப்படுத்தி அசிங்கப்படுத்தி இருக்கின்றார்... உண்மையான செங்கேணி பார்வதிக்கு, நடிகர் சூர்யா சம்பாதிக்கும் பணத்தில் ராயல்ட்டி கொடுக்க வேண்டும்.. மேலும், அந்த ஜெய்பீம் திரைப்படத்தில் உண்மை திருடன் யார், அவருக்கு என்ன தண்டனை கொடுத்தாய். திருடனுக்கு என்ன தண்டனை என்று கூற மாட்டாய், பொய்யாக சாதிவேறுபாடுகளை திரைப்படத்தின் மூலம் காட்டி அதன் மூலம் சுயவிளம்பரம் மட்டும் தேடிக் கொள்வாயா..?

அதுமட்டுமல்ல, இனி வர உள்ள மற்ற நாட்களில் கரூர் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்" என்று பிஎம்கே.பாஸ்கரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

news courtesy:https://tamil.oneindia.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை