அண்ணாத்த படம் தோல்வியா

 அண்ணாத்த படம் தோல்வியா.? ரஜினியின் சம்பளத்திலேயே கைவைத்த சன் பிக்சர்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இந்தப் படம் தீபாவளி அன்று தியேட்டரில் வெளியானது.


பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதனால் படத்தின் ஓப்பனிங் வசூல் மிரட்டலாக இருந்தது. ஆனால் அதை அடுத்து வந்த தொடர்ச்சியான மழையின் காரணமாக தியேட்டரில் கூட்டம் குறைந்தது.

மேலும் படம் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதனால் படத்திற்கு போடப்பட்ட செட் மற்றும் பிற செலவுகளால் தயாரிப்பாளர் நஷ்டத்தை சந்திக்கும்படியானது.

இதன் காரணமாக தயாரிப்பாளரான கலாநிதி மாறன் படத்தில் உள்ள மொத்த டெக்னீசியன்களுக்கும் 30 சதவீத சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முக்கிய நடிகர், நடிகைகளின் சம்பளமும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.


அதுபோக படத்தில் பழைய படங்களின் சாயல்கள் நிறைய இருந்தது மற்றும் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது கொஞ்சமும் பொருத்தமில்லை என்ற நெகட்டிவான விமர்சனங்களும் படத்தின் வசூலுக்கு பின்னடைவாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த வசூல் இப்படத்திற்கு வரவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தில் பாதியை குறைத்து கொண்டுள்ளார். அதாவது 30 கோடிக்கும் மேல் தன்னுடைய சம்பளத்தை அண்ணாத்த திரைப்படத்திற்காக விட்டுக் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் ஏற்கனவே தர்பார் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக  தன்னுடைய சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக  ஒரு சில எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும் வசூல் ரீதியாக அண்ணாத்த படம் வெற்றி பெற்றதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.சிலர் மறுத்துள்ளனர்

விரைவில் ஓட் ட்டியில் வெளியிட்டு நஷ்டத்தை குறைக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,