பழசி ராஜா

 பழசி ராஜா மரணித்த நாளின்று!






😢
கேரளமண்ணிலே பதினெட்டாம் நூற்றாண்டிலே முதல்முதலில்யே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதுத்து போராடின ஒரு மன்னரிவர்…
வீர கேரள வர்மா பழசி ராஜாங்கிறது அவரோட முழுப்பேரு. ‘வயநாட்டுச்சிங்கம்’ நு அவருக்கு பட்டப்பேருண்டு. இப்ப உள்ள கோட்டயம் பகுதியிலே மன்னரா இருந்தார். ஆரம்பத்திலே அவர் பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவாத்தான் இருந்தார். திப்புசுல்தானை எதுத்து பிரிட்டிஷ் படைகள் போர்செய்தப்போ அவர் அதுக்கு ஆதரவு தெரிவிச்சார்.
ஆனா போர் முடிஞ்சதுமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மத்த ராஜாக்கள் மேலே கடுமையான வரிகளைச் சுமத்த ஆரம்பிச்சாங்க. அதுக்கு எதிரா போராடின பழசி ராஜாவுக்கு மத்த ராஜாக்களோட உதவிகள் கிடைக்கல்லை. ஆனாலும் அவர் தன்னந்தனியா நின்னு போராடினார். கட்டாய வரிவசூலை அவர் எதிர்த்தார். அதனால அவரை பிரிட்டிஷ்காரங்க எதிரியா நினைக்க ஆரம்பிச்சாங்க.
லெப்டினெண்ட் கோர்டான் தலைமையிலே அவரது அரண்மனையை தாக்கி அதை சூறையாடினாங்க. அதுக்கு முன்னாடியே அவர் ஊரைவிட்டு போயிருந்தார். தன் படையோட மலைப்பகுதியான வயநாட்டுக்குப்போய் இன்னைக்குள்ள மானந்தவாடி பக்கம் மலைகளுக்குள்ள முகாமிட்டு அங்க உள்ள ஆதிவாசிகளான குறிச்சியரை ஒண்ணாச் சேத்து ஒரு நல்ல படையை உண்டு பண்ணினார்.
பிரிட்டிஷார் அவரை பிடிக்க பலதடவை முய்ற்சிசெய்ஞ்சாங்க. முடியலை. அதனாலே அவர்கிட்ட சமாதானம் பேசினாங்க. ஆனா சமாதானம்கிற பேரிலே அவங்க போட்ட நிபந்தனைகளை பழசிராஜா ஏத்துக்கலை. அவர் மலைக்குப்போய் கொரில்லா முறையிலே போராட ஆரம்பிச்சார். அவரோட ஆதரவாளர்களான சுழலி நம்பியார், பெருவயல்நம்பியார், கண்ணவத்து நம்பியார் முதலிய நிலப்பிரபுக்களையெல்லாம் பிரிட்டிஷ்காரங்க பிடிச்சு ஜெயிலிலே போட்டாங்க. 1802லே அவரோட முக்கிய தளபதியான எடச்சேன குங்கன் நாயரும் இன்னொரு தளபதியான தலைக்கல் சந்துவும் சேந்து பனமரம் கோட்டையை கைப்பற்றி 70 பிரிட்டிஷ் துருப்புகளைக் கொன்னாங்க. அது பிரிட்டிஷ்காரங்களை பதற வைச்சுது. மும்பையிலே இருந்து இன்னும் படைகளை வரவழைச்சு அந்த எதிர்ப்பை அழிக்க திட்டம்போட்டாங்க.
1804லே கர்னல் மாக் லியோட் பழசிராஜாவை பிரிட்டிஷ் எதிரியா அறிவிச்சு தலைக்கு விலை வைச்சார். அவரைப்பற்றி தகவல்களை மறைக்கிரவங்களுக்கும் தூக்குத்தண்டனைன்னு அறிவிச்சார். 1804ல் தலைச்சேரிக்கு சப்கலக்டரா வந்த தாமஸ் ஹார்வி பாபர் பழசிராஜா விஷயத்தை கொஞ்சம் மென்மையா கையாளனும்னு நெனைச்சவர். ஆனால் பிரிட்டிஷ் படைகள் ரொம வெறியோட இருந்தாங்க. 1805 அக்டோபரிலே தலைக்கல் சந்து பிடிபட்டார். 1805 நவம்பர் 30 ஆம்தேதி பாபரின் படைகள் வயநாடு மலைகளில்கே பழசி ராஜாவைச் சூழ்ந்து தாக்கினாங்க. கடுமையான துப்பாக்கிச்சண்டைக்கு முன்னாடி பழசிராஜாவோட அம்புகளால பெரிசா ஒண்ணும் செய்ய முடியல்லை. சுட்டுக்கொன்னுட்டாங்க. அதோட அந்த கலகம் முடிவுக்கு வந்தது
பழசிராஜாவோட உடலை பாபர் தலைசேரிக்குக் கொண்டுட்டுபோய் உரிய மரியாதையோட அடக்கம்செய்தார். ‘நம்ம எதிரியா இருந்தாலும் அவர் ஒரு பெரிய வீரன்’ அப்டீன்னு தன் மேலிடத்துக்கு அவர் எழுதியிருக்கார்.
இந்த பழசிராஜாதான் கேரள சரித்திரத்திலே முதல் முதலா பிரிட்டிஷ் படைகள் கூட போராடினவர். இவர் கதையை கோகுலம் சிட்பண்ட் ஓனர் படமாகக் கூட எடுத்தார்
 Subash

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி