இன்டர்நெட் இல்லாமலும் மெசேஜிங்
இன்டர்நெட் இல்லாமலும் மெசேஜிங்... வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 புதிய வசதிகள்!
வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை விரைவில் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது மெட்டா (META) நிறுவனம். இப்படியான புதிய வசதிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் WABetaInfo இணையதளம் இப்போது வரவிற்கும் அப்டேட்ஸ் பற்றியும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் சில வசதிகள் ஏற்கெனவே பீட்டா பயனாளர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
வாட்ஸ்அப் பயனாளர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் வசதி இது. இப்போது வாட்ஸ்அப் வெப் வெர்ஷனை பயன்படுத்த ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் இணைப்பு தேவையாக இருக்கிறது. வரப்போகும் அப்டேட் மூலமாக இனிமேல் வாட்ஸ்அப் வெப் வெர்ஷனை நான்கு டிவைஸ்களில் லாகின் செய்து பயன்படுத்த முடியும். மேலும் ஸ்மார்ட்போன் இன்டர்நெட்டில் கனெக்ட் ஆகி இருக்க வேண்டிய அவசியமில்லை.
வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜ் தானாக அழியும் வசதி கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த வசதியைப் பயன்படுத்தினால் ஒரு மெசேஜ் 7 நாள்களில் அனுப்பியவர், பெறுபவர் என இரண்டு பக்கங்களிலுமிருந்து மறைந்து விடும். தற்போது வரப்போகும் அப்டேட் மூலமாக 7 நாள்கள் என்பதுடன் சேர்த்து 24 மணி நேரம், 90 நாள்கள் என்ற கால அளவுகளை கூடுதலாகக் கொடுக்கவிருக்கிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப் செட்டிங் பகுதியில் லாஸ்ட் சீன், ஃப்ரொபைல் போட்டோ, விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்கும் வசதி இருக்கிறது. புதிய அப்டேட் மூலமாக இந்த வசதியைக் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விவரங்களை அவர்களிடம் இருந்து மறைக்கும் வசதியைக் கொண்டு வருகிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ் செய்வதை விட வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எளிதாக இருந்தாலும், அதை அனுப்புவதற்கு முன்னால் கேட்க முடியாது என்ற சிக்கல் இருந்தது. நீண்ட நாள்களாக மாற்றம் இல்லாமல் இருந்த வாய்ஸ் மெசேஜ் பகுதியில் மாற்றம் கொண்டு வரப்போகிறது வாட்ஸ்அப். வரப்போகும் அப்டேட் மூலமாக ஒரு வாய்ஸ் மெசேஜை அனுப்புவதற்கு முன்னால் நம்மால் கேட்க முடியும்.
வாட்ஸ்அப் கம்யூனிட்டி என்பது இருக்கும் வசதிகளை மேம்படுத்துவது போல இல்லாமல் புதிதாக கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் கம்யூனிட்டி வசதி மூலமாக பல்வேறு குரூப்களை ஒன்றாக இணைத்து ஒரே கம்யூனிட்டியின் கீழ் வைத்துக்கொள்ள முடியும். இது அட்மின்களின் வேலையை எளிதாக்கும் மேலும் கூடுதலான நபர்களிடையே செய்தியைக் கொண்டு சேர்க்கும்.
Comments