உடல் எடை குறைய உணவு முறை

 தொப்பை மற்றும் உடல் எடை குறைய உணவு முறை மாற்றத்தோடு வாழ்க்கை முறையையும் அவசியம் மாற்ற வேண்டும்...√ சரியான நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமாக உடற்பயிற்சி அவசியம். 


√ நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல், மெல்லாட்டம் என்று உங்களால் முடிந்ததை தேர்தெடுத்து செய்ய வேண்டும். 


√ விளம்பரத்தை பார்த்து நீங்கள் வாங்கும் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சி பொருட்கள் உங்கள் எடையை வேகமாக குறைத்தாலும் அதை விட்டவுடன் வேகமாக எடை கூடும். பக்கவிளைவுகளும் ஏற்படும். 


உடல் எடை குறைய


√ 4 டீ ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடியுங்கள். காலை எழுந்தவுடன், இரவு படுக்க போகும் முன்பு என தினம் இருவேளை இதனை பின்பற்றுங்கள். இரண்டே மாதத்தில் உடல் லேசாக இருப்பது போன்று உணருவீர்கள். உங்கள் எடையை நீங்கள் சுமக்கும் பாரமே தெரியாது. உடை எடை கணிசமாக குறையும்.


√ சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

* காலை 7 - 9 மணிக்குள் காலை உணவாக 4 இட்லி அல்லது எண்ணெய் குறைவாக இரண்டு தோசை. 

* மதியம் 12 - 2 மணிக்குள் ஒரு கப் சாதம், நிறைய காய்கறிகளுடன்,

* இரவு 7 - 9 மணிக்குள் 2 சப்பாத்தி அல்லது 3 இட்லி. இடையில் பழங்கள், பழச்சாறுகள் என்று உங்கள் டயட்டை ஒரு மாதத்திற்கு செய்து பாருங்கள். தொப்பை தானாக குறையும்.


√ 4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பாலுடன் பூண்டை சாப்பிடுங்கள். பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.


√ இஞ்சி சாறு உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். இஞ்சி சாற்றினை தினம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை விரைவில் குறையும்.


√ உடல் எடை குறைய இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து தினம் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். 


√ திரிபலா சூரணத்தை காலை வெறும் வயிற்றில், இரவு உணவுக்குப் பின் ஒரு மணிநேரம் கழித்து என தினம் இருவேளை ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கும் பதம் வந்தவுடன் அருந்துங்கள். 

(50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காலை அல்லது இரவு ஒரு வேளை மட்டும் அருந்த வேண்டும்)


குறிப்பு


என்னதான் உணவில் நீங்கள் கட்டுப்பாட்டோடு இருந்தாலும், தினம் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். தினம் 5 முறை குனிந்து உங்கள் கால் கட்டை விரலை தொடுங்கள். 2 நிமிடங்கள் தாக்குப் பிடித்து தொடர்ச்சியாக நில்லுங்கள்.  


வெந்தயம், பூண்டு, இஞ்சிச்சாறு, இலவங்கப்பட்டை பொடி ஏதாவது ஒரு முறையை பின்பற்றுங்கள். உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் உணவு உண்பது அவசியம். இத்தோடு திரிபலா சாப்பிடலாம் பிரச்னையில்லை.


வெந்தயம், பூண்டு,  இலவங்கப்பட்டை பொடி வெறும் வயிற்றில் சாப்பிட்ட பின் காபி, டீ குடிக்ககூடாது. சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று நினைத்தால் வெந்நீர் அல்லது பால் சேர்க்காத காபி / டீ குடிக்கலாம். காலை உணவுக்குபின் அரை மணி நேரம் கழித்து காபி / டீ குடிக்கலாம். 


உடல் எடையை குறைப்பதில் பொறுமை மிகமிக அவசியம். வேகமாக கூடிய உடல் எடை மெதுவாகத்தான் குறையும். 


X உடற்பயிற்சி இன்றி மருந்தால் உடல் எடையை குறைக்க முடியாது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,