ஜெய்பீம் சூர்யாவுக்கு சந்தானம் அறிவுரை

 ஜெய்பீம் சூர்யாவுக்கு சந்தானம் அறிவுரை..! யாரையும் உயர்த்திக் காட்ட யாரையும் தாழ்த்திக் காட்டாதீங்க..!







சினிமாவில் எதனை வேண்டுமானாலும் உயர்த்திக் காட்டலாம்; அப்படி உயர்த்திக் காட்டுவதற்காக இன்னொன்றை தாழ்த்தி காட்டக் கூடாது என ஜெய்பீம் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவுக்கு நகைச்சுவை நடிகர் சந்தானம் அறிவுரை வழங்கி உள்ளார்..


ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் திரை உலகம் பெரும்பாலும் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் ஞானவேலுவுக்கும் ஆதரவாக இருக்கிறது. திரை உலக சங்கங்கள், இயக்கங்களும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன

அரசியல் கட்சிகளில் பாமக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நடிகர் சூர்யாவை ஆதரிக்கின்றன. சென்னையில் நேற்று நடைபெற்ற சபாபதி படம் தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானமும் ஜெய்பீம் குறித்து பேசினார்


சபாபதி பட நிகழ்வில் சந்தானம் பேசியதாவது: ஜெய்பீம் படமாக இருந்தாலும் எந்த படமானாலும் நாம் சொல்றது இதுதான்..நாம ஒரு கருத்தை சொல்றோம். பேசறோம்னா நான் இந்துயிசத்தை பற்றி பேசற.. இந்துன்னு பேசறன்னா நான் சூப்பர்.. உயர்ந்ததுன்னு என்ன வேணும்னாலும் பேசலாம். அது பிரச்சனை கிடையாது.

தாழ்த்தி பேசுவது தேவை இல்லை
 ஆனா கிறிஸ்டியன் தப்பு.. அவன் தாழ்த்தப்பட்டவன்னு பேசக் கூடாது. எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். அடுத்தவங்க ஹர்ட் பண்ற மாதிரி அவங்களை அமுக்கி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம்.

சினிமாங்கிறது 2 மணிநேரம் லைட் ஆப் பண்ணிட்டு எல்லாரும் எல்லா ஜாதிக்காரர்களும் மதத்துக்காரங்களும் பார்க்கிறது. அங்க இது தேவைப்படாத விஷயம். நீங்க இந்துமதத்தை தூக்கிகாட்டுங்க.. அல்லது எதை பிடிச்சிருக்கோ அதை தூக்கி காட்டுங்க. அது பிரச்சனை கிடையாது. ஆனா அடுத்தவனை தாழ்த்தி காட்டாதீங்க.. இந்து மதம் சூப்பர்னா அதை சொல்லுங்க.. அதுக்காக கிறிஸ்டியானிட்டியை தாழ்த்த கூடாது.. அதுதான் என் கருத்து. நாம எதனை வேணும்னாலும் தூக்கி பேசலாம்.. அது பிரச்சனையே இல்லை. இவ்வாறு சந்தானம் பேசினார்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி