. இப்போதைக்கு பெரிசா பிரச்சினை இல்லை..

 

. இப்போதைக்கு பெரிசா பிரச்சினை இல்லை.. சென்னைவாசிகளுக்கு ஆறுதல் தந்த வெதர்மேன்!


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த காற்றழுத்தம் புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பரவலாக மிக கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அந்தமான் இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்தது. அதன்படி 13 ஆம் தேதி அந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. ஆனால் இந்த காற்றழுத்தம் வரும் 18 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தீவிரமடையும் என சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் இது இரு வேறு விதமாக பயணிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். முதலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி புயலாக மாறி, ஒரே தீவிரத்தன்மையுடன் இருந்தால் அது மேற்பகுதியில் நகர்ந்து மத்திய மற்றும் வடக்கு ஆந்திராவின் மேற்கு, வடமேற்கு திசையில் உயர்ந்த காற்றால் நகரும். இன்னொன்று அந்த குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகவோ புயலாகவோ மாறினால், அது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து குறைந்த காற்றால் தெற்கு ஆந்திராவுக்கோ அல்லது வட தமிழகத்திற்கோ செல்லும் என தெரிவித்திருந்தார்.
வடதமிழகம் என்றவுடன் ஏற்கெனவே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு ஒரு வாரம் ஆகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் உள்ளதால் சென்னை மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னைக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயத்தையும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ரேடாரை பொருத்தவரை புதிய காற்றழுத்தம் உருவானதை சுற்றியுள்ள பகுதிகள் பச்சை நிறமாகவே இருக்கிறது.

நெல்லூர்- காவாலி தெற்கு ஆந்திராதான் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. நெல்லூர்- காவாலி இடையே வடசென்னை அருகே மேகக் கூட்டங்கள் குவிந்துள்ளன. இவை வடதமிழகத்தின் பக்கம் நகர்ந்து வந்தால் தற்போதைய சூழலில் சென்னையில் மிகப் பெரிய மழை எல்லாம் இருக்காது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் காற்று குவிதலால் மழை மேகங்கள் வடமேற்கு பக்கம் செல்லும். இதில் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தற்போதைய சூழலில் சென்னைக்கு பெரிய மழை என்பதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

thanks:https://tamil.oneindia.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,