காலை எழுந்ததும் நகங்களை இப்படி தேய்த்தால்
காலை எழுந்ததும் நகங்களை இப்படி தேய்த்தால் தலை முதல் கால் வரை பல நன்மைகள் கிடைக்குமாம்...!
இந்த யோகாவில் கைகளை குவித்து நகங்களை உரசும்போது உங்கள் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது.
நகங்களை உரசுவதால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல நன்மைகளைப் பெறலாம் என்கின்றனர். எப்படி தெரியுமா..?
இந்த யோகாவில் கைகளை குவித்து நகங்களை உரசும்போது உங்கள் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதால் முடியின் வேர்கள் உறுதியாக முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.
காலை வேளையில் செய்யும்போது உங்கள் நரம்புகள், தசைகள் இலகுவாகி ரிலாக்ஸாகின்றன. இதனால் உங்கள் டென்ஷன் , பதட்டம் அனைத்தும் தீரும். பெரும் நிம்மதி கிடைக்கும்.
ஏற்கெனவே சொன்னதுபோல் தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடி வேர்கள் உறுதியாகி முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு பிரச்சனையும் இருக்காது. நல்ல வளர்ச்சி கிடைக்கும்
முடி வளர்ச்சி மட்டுமன்றி முடியின் தரமும் சிறப்பாக இருப்பதால் இளமையிலேயே நரை முடி , முடி உடைதல், பொடுகு போன்ற பிரச்சனைகளும் இருக்காது.
நகங்களை உரசும்போது இரத்த ஓட்டம் சீராகும் என்பதால் அது இதயத்திற்கு, நுரையீரலுக்கும் பல நன்மைகளை அளிக்கின்றன. குறிப்பாக இதயம் இரத்ததை சுத்தப்படுத்தி அதன் வேலையை சிறப்பாக செய்ய உதவுகிறது. இதோடு நுரையீரல் சுவாசமும் சீராகிறது.
சரி இந்த நகங்களை உரசும் பயிற்சியை முறையாக எப்படி செய்ய வேண்டும்..? முதலில் காலை எழுந்ததும், காலைக்கடன்களை முடித்துவிட்டு ரிலாக்ஸாக அமர்ந்து 10 முறை மூச்சை இழுத்து வெளியிடுங்கள். பின் இரு விரல்களையும் மார்புக்கு நடுவே ஹார்ட் ஷேப் போல் குவித்து பத்து விரல்களின் நகங்களும் படும்படி சேர்த்து மெதுவாக உரசி தேய்க்க வேண்டும். இப்படி 5 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். அதற்கு மேலும் செய்யலாம்.
நன்றி
https://tamil.news18.com/
Comments