அய்யப்ப மாதவன்.
நவீன தமிழ்க்கவிதை வெளியில் 25 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன.
ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய
தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.
பரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர்.
இதுவரை 13 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். நான்காவது குறும்படம் வெளியாக உள்ளதாகக் பதிவு செய்துள்ளார். இவர் முகநூல் வாழ்க்கை பதினோரு ஆண்டுகள். இவர் பாடல் எழுதிய 'உத்ரா' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இவரது "எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளைநிறப் பறவை"
கவிதைத் தொகுப்பு டிசம்பரில் வெளியாக உள்ளது. இவரது "எனக்குப் பிடித்த கவிதை",
புத்தரின் விரல் பற்றிய நகரம்" இரண்டாம் பதிப்புகள் வெளிவர உள்ளது. இவரது 13 கவிதை நூல்களோடு ஒரு நாள் ஆய்வு நவம்பர் 14 இல் தக்கலையில் நடைபெற உள்ளது.
இவரது முகநூல் கவிதைகள் எல்லாம் அற்புதமானவை. அழகான வீடியோக்கள் இவர் பதிவில் நிறைய உண்டு. உண்மையை அப்படியே பதிவு செய்கிறார். "கவிதைத் தொகுப்பு போட்டால் மார்க்கெட்டிங் பண்ணத் தெரியனும். முக்கிய ஆளுமைகளுக்கு ஓசியில் நூல் அனுப்ப வேண்டும். பெரிய எழுத்தாளர் என்று சொல்லப்படுகிற ஒருவரை வைத்து வெளியிட வேண்டும். அந்த எழுத்தாளர் வந்தால் உங்கள் நூல் விற்றுத் தீர்ந்து விடும். விருதுக்கான
அந்தஸ்த்தும் வந்து விடும்"
தன் கவிதைகள் மீது நம்பிக்கை இல்லாத கவிஞர்களை மறைமுகமாகச் சாடுவதுபோல் உள்ளது இந்தப் பதிவு. எதற்கெடுத்தாலும் தமிழ் கவிஞனை பாப்லோ நெரூடாவைப் போன்றவன் என்றுதான்
சொல்லுறீங்க. ஏங்கடா? என்று கேட்கிறார்.
Comments