சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்

 சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள்: சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்



சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்திருந்தது.

இதனை மறுபரிசீலனை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில், குடியரசுத் தலைவர் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இன்று காலை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து, கார் மூலம் சாலை மார்க்கமாக கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட சஞ்சிப் பானர்ஜி, கொரோனா காலத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன்கள் வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், நீலகிரியில் டி23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்,  மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட நிலையில்,  சக நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி எழுதிய கடிதத்தில்,

சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க முடியாததற்காவும் மன்னியுங்கள். என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன்.

என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல. நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள்.

நேரில் சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள். ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறீர்கள் முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை. சொந்த மாநிலம் என தமிழகத்தை 11 மாதமாக சொல்லி கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன். 

ஐகோர்ட்டில் இருந்து விடைபெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,