Wednesday, November 24, 2021

அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்! /ஒதுங்கிய திமுக/சூர்யா அப்செட்

 

அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்! ஒதுங்கிய திமுக..! எச்சரிக்கும் வன்னியர் கூட்டமைப்பு!

ஜெய்பீம் பிரச்சனையை பாமக துவங்கிய போது சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு தற்போது இல்லாமல் போன நிலையில் பாமக எதிர்ப்பை தீவிரப்படுத்தியிருப்பது சூர்யா தரப்பிற்கு நெருக்கடியை மேலும் அதிகமாக்கியுள்ளது.


ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை முக்கிய திருப்பு முனையாக இருந்தது. ஆனால் அந்த வருத்தத்திற்கு பிறகும் பாமக தரப்போ, வன்னியர் சமுதாய அமைப்புகளோ அமைதி அடையவில்லை. சொல்லப்போனால் இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் சூர்யா ஹேட்ஸ் வன்னியர் எனும் ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தார்கள். இதனிடையே இந்த விவகாரத்தில் வன்னியர் அமைப்புகள் வேகத்தை குறைக்காததும், திடீரென சூர்யா தரப்பில் இருந்து இறங்கி வந்ததிலும் பல முக்கிய விஷயங்கள் மறைந்திருப்பதாக கூறுகிறார்கள்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக சூர்யாவிற்கு அன்புமணி கேள்வி எழுப்பி எழுதிய கடிதம் தான் இந்த பிரச்சனையின் மையப்புள்ளி. அந்த கடிதத்திற்கு சூர்யா பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்பது தான் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கோபத்திற்கு காரணம். மேலும் அன்புமணிக்கு பதில் அளித்துவிட்டு திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா கடிதம் எழுதியது தான் பிரச்சனை உக்கிரமாகவும் காரணம் என்கிறார்கள். அதாவது இந்த விஷயத்தை சூர்யா அரசியல் ஆக்கிவிட்டதாக பாமக தரப்பு கூறுகிறது.


தங்கள் கடிதத்திற்கு பதில் அளித்ததோடு நின்று இருந்தால் கூட பிரச்சனை பெரிதாகியிருக்காது, ஆனால் திருமாவை பாராட்டி சூர்யா கடிதம் எழுதியது ஏன் என்கிற கேள்வி தான் எங்களின் கோபத்திற்கு காரணம் என்கின்றனர் அவர்கள். அத்தோடு, அன்புமணிக்கு சூர்யா எழுதிய கடித்தில் அவருக்கு சில அறிவுரை வழங்கும் தொனியும் இருந்தது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து தான் பாமக இந்த பிரச்சனையை பெரிதாக்கியது என்கிறார்கள். பிரச்சனையின் அடுத்தகட்டமாக சூர்யா படங்களை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என பாமகவினர் மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

சேலம் மட்டும் அல்லாமல் வட மாவட்டங்களில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் தொடர்பு கொண்டு இனி சூர்யா படங்களை திரையிடக்கூடாது, வன்னியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பாமக மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் தங்கள் லெட்டர் பேடில் கடிதம் கொடுத்து வருகின்றனர். கடிதத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை மென்மையாக இருந்தாலும் சூர்யா படத்தை திரையிட்டால்? என்கிற மிரட்டல் தொனியும் அதில் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த கடிதத்தை எந்த ஒரு திரையரங்க உரிமையாளரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்
சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி
 இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்போது தான் பிரச்சனையின் தீவிரம் சூர்யா தரப்பிற்கு தெரியவந்துள்ளது. படத்திற்கான வெளியீட்டு தேதியை அறிவித்த பிறகு அதற்கான திரையரங்குகள் புக்கிங்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் வட மாவட்டங்களில் சூர்யாவின் படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் யோசிப்பது அப்போது தான் தெரியவந்தது.

சூர்யா அப்செட் 
வன்னியர் சமுதாய இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக சூர்யா மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பிரச்சனை தீருவதற்கு முன்பாக அவரது படத்தை திரையிடும் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க இயலாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கூறியதாக சொல்கிறார்கள். இந்த தகவல் சூர்யாவிற்கு பாஸ் செய்யப்பட்ட நிலையில், திரையுலகில் உள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த சூர்யாவின் நல விரும்பிகளும் இந்த விவகாரத்தில் பாமகவை, அன்புமணியை எதிர்ப்பது சரியில்லை, அவர்களோடு சமாதானம் செய்து கொள்வது தான் நல்லது என்றே அறிவுரை கூறியுள்ளனர்.
வன்னியர் கூட்டமைப்பின் எதிர்ப்பு நிச்சயமாக பாமக மட்டும் அல்ல வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி கூட ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அக்கின குண்டத்தை அவமதித்ததை ஏற்கவே முடியாது என்றும் சூர்யா தரப்பு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும் வன்னியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே இதனை பாமகவுடனான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது என்று சூர்யாவிடம் அவருக்கு நெருக்கமான வன்னியர் சமூக நண்பர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். அத்தோடு பகிரங்கமாக சூர்யாவிற்கு மிரட்டல் விடுத்த பாமக மாவட்டச் செயலாளரை தற்போது வரை போலீசார் கைது செய்யவில்லை. இதன் மூலமே இந்த விவகாரத்தின் திமுக அரசின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள இயலும். மேலும் வழக்கமாக பாமகவுடன் மல்லுகட்டும் திமுக எம்பி செந்தில் கூட ஜெய்பீம் விவகாரத்தில் அமைதி காக்கிறார்.
திக் திக் மனநிலையில் சூர்யா
 எனவே இனி உங்கள் படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்றால் வன்னியர்களை சமாதானம் செய்ய வேண்டியது முக்கியம் என்று சூர்யாவிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்தே சூர்யா படத்தின் இயக்குனர் ஞானவேலை வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வைத்ததாக கூறுகிறார்கள். ஆனால் அந்த அறிக்கை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் சூர்யாவால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பாமக தரப்பும் கூறிவிட்டது. எனவே ஜெய்பீம் விவகாரத்தால் எதற்கும் துணிந்தவன் திரையரங்குகளில் பிரச்சனை இல்லாமல் வெளியாகுமா? என்கிற திக் திக் மனநிலைக்கு சூர்யா வந்துவிட்டதாக கூறுகிறார்கள்
thanks 

https://tamil.oneindia.com/
No comments:

Featured Post

தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு ||sumis channel/

  தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு | சமயபுரத்தாளின் சிறப்புகள்|Samayapuram Varalaru |sumis channel video link