ஒரு கடலாய் வாழ்வது/#மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்
 ஒரு கடலாய் வாழ்வது

அவ்வளவு எளிதல்ல.
அத்தனை அலைகளையும்
தாங்கும் கரையொன்றை
கட்டிக்கொள்ள வேண்டும்;
அதற்கு காத்திருப்புகளை
மட்டுமே,
பழக்கப்படுத்த வேண்டும்.
ஆசையாய் மீன்களை வளர்த்து
அவற்றை இன்னொன்றிற்கு
இரையாக்க வேண்டும்.
தனிமை நிரம்பி வழியும்
கப்பல்களை மூழ்காமல்
மிதக்க செய்யவேண்டும்.
ஒரு கடலாய் வாழ்வது
அவ்வளவு எளிதல்ல.
அங்கு கண்ணீர்
கூடுதலாய் கரிக்கும்.
தினமாயிரம் பிரிவுகள்
கைக்குலுக்கி கொள்ளும்.
தனிமையில் அரவணைத்துக்
கொள்ள தோள்கள் இராது.
இத்தனையும் தாண்டி,
நோக்கும் கண்களுக்கெல்லாம்
அதிசயத்தையே,
எவ்வளவு காலம் பரிசளிக்க முடியும்?
இருந்தும், எப்படி சிலர் மீது
வீசுகிறது அக்கடலின் வாசம்.

❤️💃💃

Comments

Venkatpemi said…
அருமை. தனிமை வாழ்வில் கடலைக் காட்டிய வரிகள் கடலின் அலைகளில் தனிமையைக் காட்டின.

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,