காங்கிரஸ் போராட்டம்: கட்சியினரிடம் சிக்கிக்கொண்ட நடிகர் -ஜோஜு ஜார்ஜு

 காங்கிரஸ் போராட்டம்: கட்சியினரிடம் சிக்கிக்கொண்ட நடிகர் - பயங்கர தாக்குதல்



திருவனந்தபுரம்

பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

எர்ணாகுளம் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால் கொச்சி - எர்ணாகுளம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. தேசிய நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் நின்றன.

பல மணி நேரம் நீடித்த இந்தப் போக்குவரத்து தடையில் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜும் சிக்கி உள்ளார்.  இவர், 'ஜோசப்' என்ற படத்திம் மூலம் மலையாளத்தின் முன்னணி நடிகராக உயர்ந்தவர்.  'ஜெகமே தந்திரம்' மூலமாக தமிழில் அறிமுகமானார். சிவதாஸ் என்ற  கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜோஜூ ஜார்ஜ்.

ஜோஜு ஜார்ஜ் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சென்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் இருப்பதாக வாதிட்டுள்ளார். பதிலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோஜூவின் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கே நின்று ஜோஜு சத்தம் போட ஆரம்பித்தார்.

இவ்வளவு பேர் மணிக்கணக்கில் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் நிற்கின்றன. சாதாரண மனிதர்களை தொந்தரவு செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம். கொரோனா காலத்தில் எரிபொருள் அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களைதான் இவர்கள் மீண்டும் காயப்படுத்துகிறார்கள்.

இந்தப் போராட்டம் மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்காக தங்கள் இடங்களுக்கு செல்லும் மக்களைதான் வெகுவாக பாதிக்கிறது. அதுபோன்றவர்களால் இங்கே இறந்தால் என்ன நடக்கும். நான் காங்கிரஸ் கட்சியையும் அதன் காரணத்தையும் மதிக்கிறேன். எரிபொருள் விலை உயர்வு ஓர் உண்மையான பிரச்சினை. ஆனால் இந்த பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேறு வழிகள் உள்ளன என்று  ஜோஜு ஜார்ஜ் கூறினார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கேரள போலீசார் போக்குவரத்தை சீர் செய்ததுடன், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகள் நடிகர் ஜோஜு ஜார்ஜ் குடிபோதையில் கட்சியின் பெண் உறுப்பினர்களிடம் சண்டையிட்டு, வேண்டுமென்றே போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டினர். 

இதையடுத்து, நடிகர் ஜோஜு ஜார்ஜை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.  போராட்டத்தின் போது நடிகர் ஜோஜு குடிபோதையில் இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவுகள்  மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மேயர் டோனி சம்மினி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 7 பேர் மீது போலீசார்  ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,