குருவையா தப்பா பேசுன.? சென்னைக்கு கிளம்பி வருகிறோம்.. வட இந்திய ராஜபுத்திரர்கள்

 


சூர்யா.. குருவையா தப்பா பேசுன.? சென்னைக்கு கிளம்பி வருகிறோம்.. வட இந்திய ராஜபுத்திரர்கள் .

இந்த திரைப்படத்தில் அம்பேத்கர் அவர்களின் சுயசரிதை குறித்து எதுவும் பேசவில்லை, கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. 


 தென்னிந்தியாவில் ஷத்ரியர்களின் தலைவரான ஜெ. குரு அவர்களை ஜெய்பீம் திரைப்படத்தில்  இழிவுபடுத்தி இருப்பதை மிக வன்மையாக கண்டிப்பதாக  வட இந்திய  சத்திரியர்களுக்கான அமைப்பான ஸ்ரீ ராஜ்புத் கருணா சேனா கண்டித்துள்ளது. மேலும், வன்னியர்களுக்கு ஆதரவாக சென்னைக்கு வர தாங்கள் தயார் என்றும், ஆனால் அப்படி வந்தால் பிரச்சினை அதிகரிக்கும் என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்றும், ஜெய்பீம் திரைப்பட குழுவை அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மஹரான எச்சரித்துள்ளார். 

சமூகநீதி ஆக இருந்தாலும் சரி, சாதியத்திற்கு எதிரான முழக்கமாக இருந்தாலும் சரி  இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக இருந்தது, இருப்பது தமிழகம்தான் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. கருத்துக்கு எதிர் கருத்து, வாத த்திற்கு வாதம் என்ன எதையும் ஏற்கும் மனப்பக்குவம் கொண்டது தமிழகம். இப்படி சமூகநீதியால், சகிப்புத் தன்மையால் பக்கவப்பட்ட இந்த தமிழகத்தில் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு குறப்பிட்ட காட்சி ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி விட்டதாககூறி சில அரசியல் கட்சிகள் கலகக் குரல் எழுப்பி இருப்பது விவாதப்பெருளாக மாறியுள்ளது. நடப்பதையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் வட மாநிலமாக மாறி வருகிறதோ என்ற ஐயமும் எழுகிறது. ஜெய்பீம் என்ற திரைப்படத்தை  மொழி, இனம் கடந்து மக்கள் வரவேற்று கொண்டாடி வரும் நிலையில், அதில் இடம்பெற்ற ஒரு காலண்டர் தங்கள் சமூகத்தையே காயப்படுத்தி விட்டது என பாமகவினர் அப்படுத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் தீவிரமாக குரல் கொடுத்து வருவதுதான் ஹாட் டாப்பிக். பாமகவின் இந்த செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்றும் ஒருபுறம் கண்டன குரல் எழுந்துள்ளது.  இதே நேர்த்தில் நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு தருவோம் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருப்பது இது என்ன தமிழகத்துக்கு ஒவ்வாத புது கலாச்சாரம், மெல்ல மெல்ல தமிழகம் வட இந்தியாவாக மாறி வருகிறதா.? என்றும் பலரும் ஆதங்க குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வன்னியர்களுக்கு ஆதரவாக வடநாட்டுச் சத்திரியர் களுக்கான ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனா என்ற அமைப்பு குரல் கொடுத்துள்ளது . இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர், நடிகர் சூர்யாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அதில், தாங்கள்  பத்மாவதி படத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தையும் மேற்கோள் காட்டியுள்ள அவர், சூர்யா நாங்கள் பாலிவுட்டையே பார்த்தவர்கள் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். 


பாமகவின் இந்த செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்றும் ஒருபுறம் கண்டன குரல் எழுந்துள்ளது.  இதே நேர்த்தில் நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு தருவோம் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருப்பது இது என்ன தமிழகத்துக்கு ஒவ்வாத புது கலாச்சாரம், மெல்ல மெல்ல தமிழகம் வட இந்தியாவாக மாறி வருகிறதா.? என்றும் பலரும் ஆதங்க குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வன்னியர்களுக்கு ஆதரவாக வடநாட்டுச் சத்திரியர் களுக்கான ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனா என்ற அமைப்பு குரல் கொடுத்துள்ளது . இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர், நடிகர் சூர்யாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அதில், தாங்கள்  பத்மாவதி படத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தையும் மேற்கோள் காட்டியுள்ள அவர், சூர்யா நாங்கள் பாலிவுட்டையே பார்த்தவர்கள் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். 

இந்த திரைப்படத்தில் அம்பேத்கர் அவர்களின் சுயசரிதை குறித்து எதுவும் பேசவில்லை, கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வரும் கதாப்பாத்திரத்திற்கு தமிழகத்தில் சத்ரிய குலத்தின் மாபெரும் தலைவராக இருந்த குரு அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஷத்ரியர்கள் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. சத்திரியர்களின் அக்னி சட்டியை பயன்படுத்தி வன்னிய குல சத்திரியர்கள் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு மாபெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சூர்யா அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், உங்கள் அப்பனுக்கு அப்பனாக இருந்த சஞ்சய் லீலா பன்சாலி அவர்களே எங்களிடம் மன்னிப்பு கோரினார். பத்மாவதி திரைப்படம் வெளியானபோது நாங்கள் நடத்திய போராட்டம் அனைவரும் அறிவர். அந்தப் போராட்டத்தின் மூலம் அந்த படக்குழுவை மன்னிப்பு கேட்க வைத்தோம்.


குருவையும் சத்ரிய மக்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் திரைப்படத்தை இயக்கி இருந்தால் நாங்கள் சென்னையை நோக்கி வருவோம், அப்படி நாங்கள் வரும்பொழுது பிரச்சனை பெரிதாகும். நாங்கள் நிச்சயம் இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்லுவோம், வன்னியர்களுக்கு நாங்கள் பின்புலத்தில் நிற்போம், இந்தியா முழுவதுமுள்ள சத்ரியர்கள், வன்னிய குல சத்திரியர்களோடு இருப்போம். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.  

source:https://tamil.asianetnews.com/


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,