*உடல் பருமன் முடி உதிர்வை அதிகரிக்குமா?

  *உடல் பருமன் முடி உதிர்வை அதிகரிக்குமா?* முடி எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பது உங்களுடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும். அதிகமான முடி உதிர்வு, பொடுகு, முடி வறண்டு போதல் ஆகியவை நீர் சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுடன் நேரடியாக தொடர்புடையதாகும். உடல் பருமனால் உங்கள் முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை. உடல் பருமனால் முடி உதிர்வு எப்படி அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.


உடல் பருமனால் உண்டாகும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். முட்டி வலி, ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் உடல் பருமனால் ஏற்படும். அதே போல, உடல் பருமன் நேரடியாகவும் மறைமுகமாகவும் உங்கள் முடியின் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படும் உடல் பருமன் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் பருமன் உடலின் பல்வேறு கூறுகளை பாதிப்பதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.


இதனால் முடி உதிர்வு தூண்டப்பட்டு கணிசமான அளவில் முடி இழப்பு உண்டாகும். இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் அதிகமான முடி உதிர்வு ஏற்படுவதற்கு உடல் பருமன் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமனால் எவ்வாறு முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை பற்றி ஈஸ்தட்டிக்ஸ் கிளினிக்கின், சரும மருத்துவ ஆலோசகர், காஸ்மெட்டிக் சரும மருத்துவர், மற்றும் சரும அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரிங்கி கபூர் பகிர்ந்துகொண்ட காரணங்கள் இங்கே


மன அழுத்தம்: உடல் பருமன் மன அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. ‌‌மேலே கூறியது போல இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண்களுக்கு வழுக்கை விழுவது, அதிகப்படியான முடி உதிர்வது ஆகியவற்றுக்கு ஆக்சிடேஷன் ஸ்ட்ரெஸ் தான் காரணம். உங்கள் உடலில் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் சுரந்து ஆரோக்கியமான ஹார்மோன்கள் சுரப்பை தடுத்து முடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது.


ஹார்மோன் குறைபாடுகள்:உடல் பருமனால் உடலில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு அதிகமாக காணப்படும். அதுமட்டுமின்றி அதிகப்படியாக சுரக்கும் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் சுரக்கும் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணமாக இருக்கும்.


தைராய்டு குறைபாடு: உங்கள் உடலில் போதிய அளவு தைராய்டு சுரக்கவில்லை என்றால் அது உடல் பருமன், எடை அதிகரிப்பு ஆகியவற்றை உண்டாக்குவதோடு தீவிரமான முடி உதிர்வை ஏற்படுத்தும்.


நீரிழிவு அல்லது நீரிழிவு ஏற்படும் அபாயம்: நீரிழிவு உடல்பருமனோடு நேரடியாகத் தொடர்புடைய நோய்களில் முதன்மையான நோயாகும். ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவு, ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் இரத்த ஓட்டக் குறைபாடு ஏற்படுவதால் உங்கள் முடிக்கு போதிய அளவு சத்துக்களும் கிடைப்பதில்லை. இது உதிர்ந்து வளரும் சுழற்சி, முடியின் அடர்த்தி, ஆகியவற்றை பாதித்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.


இதய நோய்கள்: உடல் பருமனால் ஏற்படக்கூடிய மிகவும் அபாயகரமான நோய்களில் ஒன்று இதய நோய். இதய நோய் பாதிப்பபின் அறிகுறிகளில் ஒன்று முடி உதிர்வு என்று பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதயத்தில் போதுமான அளவு ரத்த ஓட்டம் ஆக்சிஜன் சப்ளை இல்லை என்னும் பொழுது அது முடிக்கும் போய் சேராது. பெரும்பாலான சூழலில், தீவிரமான முடி உதிர்வுக்கு உடல்பருமன் முக்கியமான காரணியாக இருக்கிறது. ஆனாலும் இதற்கு எடைக்குறைப்பு மட்டுமே தீர்வு கிடையாது. நீங்கள் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கும் பயிற்சிகளோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். முடி உத்திரவுக்கு வேறு காரணங்கள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,