அண்ணாத்த படத்தால் நடந்த கூத்து..

 அண்ணாத்த படத்தால் நடந்த கூத்து.. இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் எந்த படம் வெளியானாலும் அது உலகிலுள்ள மூலைமுடுக்கெல்லாம் வெளியாகி அங்குள்ள ரசிகர்களை கொண்டாட வைக்கும்.


ஆனால் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை கவர வில்லை என்று விமர்சனம் பரவியது. தமிழகத்தில் முதல் நான்கு நாட்களில் நல்ல வசூல் செய்ததாக திரைப்படம் பின்னர் மழையின் காரணமாகவும் வசூலில் தடைபட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணாத்த படத்தின் வசூல் நல்லபடியாகத் தான் இருந்தது என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

ஆனால் ரஜினியின் படங்கள் நாளுக்கு நாள் தன்னுடைய அண்டை மாநிலங்களில் வசூல் குறைந்து வருவது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்றுள்ள முன்னணி நடிகர்களை காட்டிலும் ரஜினி படம்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவிக்கும். அதிலும் குறிப்பாக தெலுங்கு, கன்னடத்தில் ரஜினி படங்கள் வசூல் சாதனை செய்யும்.

ஆனால் அண்ணாத்த திரைப்படம் இந்த இரண்டு பகுதிகளிலும் வசூல் கம்மியாக வந்துள்ளதாம். முன்னரெல்லாம் இந்த ஏரியாக்களில் ரஜினியின் படம் சர்வசாதாரணமாக 50 கோடியை வசூல் செய்யுமா. ஆனால் அண்ணாத்த படத்தை இன்னும் நூறு நாட்கள் ஓட்டினாலும் வெறும் 40 கோடியைக் கூடத் தாண்டாது என்கிறார்கள் பணம் போட்ட முதலாளிகள்.நொந்து போன இவர்கள் 

இது சம்பந்தமாக ரஜினியிடம் தயவுசெய்து பேசுங்கள் எனவும் அல்லது படத்தின் விநியோக செலவை கம்மி பண்ணி விற்குமாறு கூறுகிறார்களாம். இது ரஜினிக்கு மட்டும் வைத்துள்ள அட்வைஸ் இல்ல அவரை நம்பி பணம் கொடுத்து வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சேர்த்துதான் என அவர்களுக்கு கருத்துக்களை கூறுகிறார்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,