WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – லாக் செய்யும் எளிய வழிமுறைகள்

 

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – லாக் செய்யும் எளிய வழிமுறைகள் 







வாட்ஸ்அப் செயலியை லாக் செய்யக்கூடிய புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் வாட்ஸ் அப்பை நீங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்கான எளிய வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

வாட்ஸ்அப்:

முன்னணி மெசஞ்சர் நிறுவனமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. தனிப்பட்ட தொலைத்தொடர்புக்கும், வணிக ரீதியான தொடர்புக்கும் வாட்ஸ் ஆப் செயலி பயனுள்ளதாக உள்ளது. வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் செய்திகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை, எனவே அந்தச் செய்தியை வேறு யாரும் படிக்க முடியாது. சமீபத்தில் வாட்ஸ் அப் தங்கள் பயனர்களின் டேட்டாக்களை கையாளும் விதம் குறித்து வெளியிட்ட அறிவிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் வாட்ஸ் அப் பயனர்கள் டெலிகிராம் செயலியை நோக்கி சென்றனர். இதனால் வாட்ஸ் அப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளால் பயனர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் வாட்ஸ் அப் UPI பேமெண்ட் சேவைகளை அறிமுகப்படுத்தி பணபரிவர்த்தனை எளிமையாக்கியது. மேலும் வாட்ஸ்அப் சாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மறையும் வகையில் டைமர் செட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்டுத்தியது. இதற்கு வாட்ஸ் அப் யூசர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ்அப் கணக்கை உங்களை தவிர வேறு யாரும் திறக்காத வண்ணம் லாக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் ஆப் லாக் செய்யும் முறைகள்:
  • முதலில் வாட்ஸ் ஆப் செயலியில் செட்டிங்ஸை திறக்க வேண்டும். அதில் பிரைவசி விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு ஆப் லாக் விருப்பத்தை கிளிக் செய்து PASSWORD உருவாக்க வேண்டும்.
  • அடுத்ததாக உங்கள் PASSWORD டை உள்ளீட்டு WhatsApp க்கான AppLock ஐ இயக்க வேண்டும்.
  • இதைச் செய்த பிறகு, உங்கள் வாட்ஸ்அப் பயன்பாடு லாக் செய்யப்படும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி எளிதாக வாட்ஸ்அப் செயலியை லாக் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி