தோள்பட்டை வலி...

அன்றாட வேலையை பாதிக்கும் தோள்பட்டை வலி...



நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு தோள்பட்டை வலி வந்தால் அதிலும், குறிப்பாக இடதுகை தோள்பட்டையில் வலி வந்தால் உடனே பயம்

கொள்வார்கள். காரணம், இது ‘இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ?’ என்று. ஆனால், அவ்வாறு ஏற்படும் தோள் பட்டை வலி உண்மையில் இருதய நோய் சார்ந்த பிரச்னையாக இல்லாமல் தோள் பட்டையில் உள்ள தசைகள், தசை நார், மஜ்ஜை, எலும்பு ஆகியவற்றை சார்ந்ததாகவும் இருக்கலாம். 


இறுகிய தோள்பட்டை...


நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு அதிகம் வரக்கூடியது 'இறுகிய தோள்பட்டை’ வலி, இதனை ஆங்கிலத்தில் மருத்துவர்கள் ‘Frozen Shoulder’ என்று அழைப்பர். அதாவது, நம் தோள் பட்டை சிறுக சிறுக இறுகுவதால் வலி ஏற்படும். மேலும், அசைவுகள் பாதிக்கும். அதனால் கையை தூக்கமுடியாமல் போகவும், வேலைகள் செய்ய அசௌகரியமாகவும் இருக்கும். 


தோள் பட்டை


√ தோள் பட்டையை மொத்த…

[21:19, 01/11/2021] Svel: இறுகிய தோள்பட்டை வலிக்கு எளிய தீர்வு...


ஐஸ் பேக்...


* ஒரு பாலிதீன் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கட்டி, அதனை கொண்டு வலியுள்ள தோள்பட்டையில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை நேரடியாக தோள்ட்டையில் வைக்க வேண்டாம். 


√ ஐஸ் கட்டி இல்லை என்றால் நன்றாக குளிர்ந்த வாட்டர் பாட்டில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.


√ இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.


கோதுமை மாவு ஒத்தடம்...


ஒரு கடாயில் கோதுமை மாவை போட்டு லேசாக வறுத்து சூடேற்றி அதனை ஒரு துணியில் போட்டு, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர, தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.


தோள்பட்டை மசாஜ்...


* ஒரு பாத்திரத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, அதில் சிறிது பச்சைக் கற்பூரத்தை சேர்த்து அந்த எண்ணெயை வலியுள்ள தோள்பட்டை பகுதியில் தடவி, வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யுங்கள்.


√ இந்த மசாஜை தொடர்ந்து வலி போகும் வரை தினம் செய்யுங்கள்.


குறிப்பு...


வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து கோதுமை சூடேற்றிய ஒத்தடம் நல்ல பலன் தரும்.


தவிர்க்க வேண்டியவை...


* சுயமருத்துவமாக கடையில் கிடைக்கும் வலி நிவாரணி மருந்துகளை வாங்கி உட்கொள்வதன் மூலம் தற்காலிகமாக வலி குறையுமே தவிர மீண்டும் சில மணி நேரங்களில் வலி தோன்ற ஆரம்பித்துவிடும். 


* மேலும் இறுக்கத்தை தளர்த்துவது மாத்திரையால் முடியாது என்பதால் நாட்களை வீணாக்க வேண்டாம். நாட்கள் கூடக்கூட இறுக்கம் அதிகமாகி, பின் முற்றிலும் தோள்பட்டையை அசைக்க முடியாமல் போகும். 


* இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் மூன்று முதல் நான்கு வாரங்களில் முழுவதும் சரி செய்து விடலாம். ஆனால், தாமதமாக ஆரம்பித்தால் இரண்டு மாதங்களுக்கு மேல் கூட ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


√ எனவே சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் தோள்பட்டை இறுக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி