உலக மீனவர் தினம்



🐠🐟🐡 - இன்று
உலகில் பறந்து விரிந்து கிடக்கும் கடலை நம்பி பல இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வாராங்க. கடல்லே இருந்து மனிசனுக்கு தேவையான உணவு பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்கிடையிலே மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997-ல் டெல்லியில் கூடி விவாதித்து உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன் பிடித் தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.
இதன்மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டுவரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள், பாரம்பரிய மீனவர்கள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளான நவம்பர் 21-ம் தேதிதான் ‘சர்வதேச மீனவர்கள் தின’மாக அறிவிக்கப்பட்டுச்சு.

நன்றி ஆந்தைரிப்போர்ட்டர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,