வில்லனுக்கு சாதி முத்திரை; நல்லவருக்கு கட்சி முத்திரை;

 


வில்லனுக்கு சாதி முத்திரை; நல்லவருக்கு கட்சி முத்திரை;


ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனை ஏன் சாதி அடையாளத்திற்குள் கொண்டு வந்தீர்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பதே தனது எதிர்வினை என அவர் கூறியிருக்கிறார்.

ஷியாம் கிருஷ்ணசாமி ''கோவிந்தனை வன்னியரா பார்க்கக் கூடாது, கம்யூனிஸ்டா தான் பார்க்கனுமாம்.. அப்போ படத்தில் போலீஸை கொடூர வில்லனா மட்டும் காட்டியிருக்கலாம், ஏன் சாதி அடையாளம் வந்தது? எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பது தானே எதிரிவினையாக இருக்கும்'' என அவர் தெரிவித்திருக்கிறார்.
சாதி அடையாளம்
 இதன் மூலம் ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனுக்கு ஏன் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரின் பெயரை சூட்டி சாதிய அடையாளம் ஏற்படுத்தினீர்கள் என படக்குழுவை சூசகமாக வினவியிருக்கிறார் ஷியாம் கிருஷ்ணசாமி. கோவிந்தனை வன்னியராக பார்க்கக்கூடாது அவரை கம்யூனிஸ்டாக மட்டும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். இதனிடையே சூர்யாவை நடிகன் என குறிப்பிட்டுள்ள ஷியாம் கிருஷ்ணசாமி அவரது வசனத்திற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார்.

ஷியாம் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ள கோவிந்தன் தான், ராஜாகண்ணுவுக்கு நீதி கோரி முதல் நபராக போராட்டத்தை முன்னெடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவரை வன்னியராக பார்க்கக்கூடாது கம்யூனிஸ்டாக பார்க்க வேண்டும் என நேற்று முதல் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
வில்லனுக்கு மட்டும் வன்னியர் சமுதாய முத்திரை, நல்லவருக்கு மட்டும் கட்சி முத்திரையா என்பதே ஷியாம் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ள கேள்வியாகும். குறவருக்கு பதில் இருளர், படம் எடுக்கப்போவதாக அனுமதி பெறவில்லை, கேள்விக்கு பதிலில்லை என நாளுக்கு நாள் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை அதிகமாகி கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,