சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா
2021- ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  4-வது முறையாக சாம்பியன் பட்டம்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருப்பதாக தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்


இதனிடையே, சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,