பிரபல எழுத்தாளர் முனைவர் கே.ஜி.ஜவஹர்

 பிரபல எழுத்தாளர் முனைவர் கே.ஜி.ஜவஹர்






எழுத்தாளர், 'கலைநன்மணி'
முனைவர் கே.ஜி.ஜவஹர்.
அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்தார். வயது 67. சொந்த ஊர் திருநெல்வேலி. படிப்பு எம்.ஏ.பொருளாதாரம்.
பள்ளிப்படிப்பு, இளங்கலை வரை பாளையம்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ்ஸிலும், முதுகலை திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியிலும் பயின்றார். வங்கி அதிகாரியாக பணிபுரிந்தார்.
இளமை முதலே இசை, எழுத்து முதலியவற்றில் மிகுந்த ஆர்வம்.
சொல்லப்போனால் எழுத்தில் இவருக்கு இது பொன்விழா ஆண்டு. ஆம். இவர் முதல் படைப்பு 1971 ஆம் ஆண்டு தினத்தந்தியில் பிரசுரம் ஆயிற்று. இது வரை
500க்கு மேற்பட்ட சிறுகதைகள் (தொடர்கள் உட்பட) தமிழகத்தின் அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் எழுதி இருக்கிறார். எழுதி வருகிறார். பேட்டிக்கட்டுரைகளின் எண்ணிக்கை 1000 தாண்டும். பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய் , சரண்சிங் உட்பட இந்தியாவின் பல பிரபலங்களை பேட்டி கண்டு எழுதியுள்ளார்.
இவர் எழுதிய ஒரு சிறுகதை தொகுப்பு நூலை அப்துல்கலாம் அவர்கள் பாராட்டியுள்ளார்.
ஆச்சி மனோரமாவிடம் 1000 கேள்விகள் கேட்டு சாதனை படைத்துள்ளார். பலசிறுகதைப்
போட்டிகளில் பரிசு பெற்று இருக்கிறார். ஆனந்த விகடன் நடத்திய பவளவிழா சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு,
இலக்கிய வீதி பரிசு, புதுகைத்தென்றல் பரிசு என பல பரிசுகள். இது தவிர இசையில் அபார ஆர்வம் உடைய இவர் தற்போது அரிதாகிவிட்ட புல்புல் தாரா இசைக்கருவியை
இசைத்து அதிலும் பேரும் புகழும் பெற்று வருகிறார். தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சிகள், பத்ரிகைகள் இவரைப் பேட்டி கண்டுள்ளன. மாண்ட்லின் ஸ்ரீ நிவாஸ், வாலி, டிஎம் எஸ், தேவா,
பாக்யராஜ், உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இவர் இசையை கேட்டு பாராட்டி உள்ளனர். தமிழகத்தில் மேடையில் இசைக்கும் புல்புல் கலைஞர் அநேகமாக இவர் ஒருவர்தான்.
தமிழக அரசின்,
'கலைநன்மணி'
'முனைவர்'
'எழுத்துச்சுடர்',
'எழுத்துச் சிற்பி'
பல்கலை வித்தகர்'
'தங்கக்கவி'
'புல்புல் இசைக்குயில்'
'புல்புல் குன்னக்குடி'
'நாதஒலி மாமணி'
'நேர்காணல் சிகரம்'
உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மறைந்துவிட்ட இவர் மனைவி ராணி பிறந்தநாள் அன்று ஆதரவற்ற சிறார்களுக்கு பாடநூல் முதலியன தந்து இவர் இல்லத்திலேயே
எளிமையாக நடத்துகிறார்.
அன்று அவர் இல்லத்திற்கு வராத இலக்கிய, இசை கலைஉலகப் பிரமுகர்கள் இல்லை எனலாம். மஹாத்மா காந்தியியின் தனிச்செயலர் ஆக இருந்த வே.கல்யாணம் ஒரு முறை இவர் இல்லம் வந்து ஆசி வழங்கியது மறக்க முடியாத அனுபவம் இவருக்கு...

kandasamy.r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,