கை வெவ்வேறு வகை /முருக.சண்முகம்
வெவ்வேறு வகை
கார்த்திகை திருநாளான இன்று :
தங்களின் பார்வைக்கு
என்னதான் உள்ளது தெரிந்து கொள்வோமே....
கதிரவனைவிட காண முடியாது ஒளி தரும் பெரிய விளக்கை
இக்கலியுகம் தோன்றுமுன்னே அமைந்ததே இந்த இயற்கை
விஞ்ஞானம் வளர்வதை உணர்த்தும் ஆராய்ச்சி அறிக்கை
விந்தைமிகு செயல்களைக் கண்டு எண்ணி மகிழ்வோம் இவ்வுலகை
இருபத்து நான்கு நிமிடங்கள் சேர்ந்தது ஒரு நாழிகை
இருப்பத்தொன்பது நாட்களில் வானில் முழு நிலவு வருகை
இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்று தான் கிருத்திகை
எல்லோரும் தீப ஒளியில் கொண்டாடும் திரு நாளே கார்த்திகை
இல்லற வாழ்வில் இனிமை சேர்க்க இணைபவள் மங்கை
இயன்றவரை நீ மாட்டிவிடு அன்பெனும் விலங்கை
இந்த மண்ணில் கிடைப்பதில் உயர்தரமே பொன் நகை
இதுவும் சுகமென கொண்டால் தானே வரும் புன்னகை
கோ-ஆப்டெக்ஸ் குறிப்பிடும் வண்ணத்துப்பூச்சி விரிக்கும் தன் சிறகை
கூட்டுறவால் நாடு உயரும் என உணர்த்தும் நல்ல கொள்கை
வியர்வை சிந்தும் உழைப்புடன் வெற்றி தரும் தன்னம்பிக்கை
விதிவசம் என செயல்படாதிருப்பது வாழ்வில் மூடநம்பிக்கை
சனநாயகம் தழைக்க பயன்படுத்த வேண்டும் நம் வாக்கை
சத்திய பிரமாணம் எடுக்கும் நல்ல முதல்வரால் நாடு வளர்ச்சியில் பெறும் செல்வாக்கை
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகை
கவிஞர் முருக.சண்முகம்
சென்னை -
Comments