கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

 கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி




ஆன்மாக்கள் தினத்தையொட்டி புதுச்சேரியில் கொட்டும் மழையில் கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி
ஆன்மாக்கள் தினத்தையொட்டி புதுச்சேரியில் கொட்டும் மழையில் கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

கல்லறை திருநாள்

உலகெங்கிலும்      உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந்தேதியை மறைந்த தங்கள் முன்னோர்களின நினைவாக   கல்லறை  திரு நாளாக கடைப்பிடிக்கின்றனர். அன்றைய தினம் இறந்துபோன உறவினர்களின் கல்லறைகளில் மலர்கள் வைத்து அவர்களை போற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதன்படி      புதுவையில் கல்லறை திருநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உப்பளம், நெல்லித்தோப்பு,       வில்லியனூர், அரியாங்குப்பம்,     ரெட்டியார் பாளையம் கல்லறை தோட்டங்களில்   நடந்த திருப்பலியில்   ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கல்லறை தோட்டங்கள் சீர் செய்யப்பட்டிருந்தன. அங்கு      பாதிரியார்கள் மந்திரித்தனர்.

கொட்டும் மழையில்...

இதையடுத்து கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் மலர்களை வைத்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்   தங்களது முன்னோர்களை நினைத்து   பிரார்த்தனை செய்தனர். 
இதற்காக   கல்லறை தோட்ட பகுதிகளில் பூக்கள் விற்பனைக்காக திடீர் கடைகள் முளைத்திருந்தன. பெங்களூரு வெள்ளை நிற பூக்கள், ரோஸ், புளுடெய்லி, ஆஸ்ட் ரோஸ், சாமந்தி, ரோஜா, மல்லி, அரளி  உள்ளிட்ட பூக்களின் விலை அமோகமாக விற்பனை செய்யப்பட்டன. கல்லறை திருநாளையொட்டி பல இடங்களில் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்ததால் உப்பளம் கல்லறை தோட்டம்       உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு   போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும்,    பாது காப்புக்காகவும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி