சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்துகொள்ள

 உலகளவில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நோயில் ஒன்று சர்க்கரை நோய். இதை எப்போதும் கட்டுக்குள் வைத்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறார்கள்.



இதற்காக இன்சுலின், மாத்திரைகள் என்று அனைத்தையும் நேரம் தவறாமல் எடுத்துகொள்கிறோம். கூடவே சரியான உணவு பொருளையும் எடுத்துகொண்டால் எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம்.


அந்த வகையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெண்டைக்காய் நீர் பெரும் பங்கு வகிக்கின்றது. தினமும் இந்த பானத்தை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.


தயாரிக்கும் முறை


முதலில் வெண்டைக்காயை வெட்டி கொண்டு பின்னர் பாத்திரத்தில் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியால் இரவு முழுவதும் மூடி வைக்கவும். குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது ஊறவைக்கவும்.


நன்மைகள்


வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து பிறகு அந்தத் தண்ணீரை பருகுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இதில் அளவற்ற புரதம், கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் தீராத நோய்கள் தீரவும் வாய்ப்புண்டு.

வெண்டைக்காயில் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஆரோக்கியங்கள் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்து விடும்.

இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்து வரும்போது பசி உணர்வு கட்டுப்படுத்தும். சிலருக்கு காரணம் இன்றி சோகமாகவும் தோன்றும். அப்படி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து என்றே கூறலாம்.


நமது உடலில் இருந்து அதிகப்படியான மினரல்கள் வெளியேறிவிடுகிறது அதனை சரிகட்ட வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள். வயிற்றுப் போக்கு, செரிமான பிரச்னை, நீரிழிவு நோய் போன்ற நோயில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி