திருமணம் செய்து கொள்ளாதது ஏன்

 திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?’’ - நடிகை காஞ்சனா உருக்கம்

‘‘திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?’’ - நடிகை காஞ்சனா உருக்கம்
‘காதலிக்க நேரமில்லை, ’ ‘சிவந்த மண்’ படங்களின் கதாநாயகி காஞ்சனா முகநூல் பக்கத்தில் திரையுலகம் மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். திருமணமே செய்து கொள்ளாதது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
‘‘என் குடும்பம் நன்றாக வாழ்ந்த குடும்பம். அப்பாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனில் மூழ்கியது. அத்தனை கடன்களும், குடும்ப பாரமும் என் மீது விழுந்தது.
படித்துக்கொண்டிருந்தபோதே எனக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்தது. அப்போதுதான் சினிமா வாய்ப்புகள் வந்தன. நிறைய புகழும், பணமும் கிடைத்தது. கடன்களை எல்லாம் அடைத்தேன்.
பெரிய இடங்களில் இருந்து சிலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் அதை என் நெருங்கிய உறவினர்களே தடுத்தார்கள். சினிமா வருமானம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. என் பணத்தை எனக்கு கொடுக்காமல், கடன் சுமைகளை மறுபடியும் என் தலையில் ஏற்றினார்கள்.
நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. கேட்டிருந்தால் செய்திருப்பார்கள். ‘‘நல்ல ஒரு பையனைப் பார்த்து திருமணம் செய்து கொள்’’ என்று என் நலனில் அக்கறை உள்ளவர்கள் அறிவுரை சொன்னார்கள். அதுதான் சரியான தீர்வு என்று உணரும்போது, எனக்கு 40 வயதாகி விட்டது.
வாழ்க்கையே வெறுத்துப்போய் கோவில் கோவிலாக சுற்றினேன். மீண்டும் சென்னை திரும்பி சட்ட போராட்டத்தில் ஈடுபட்டேன். அதன் மூலம் கொஞ்சம் சொத்துகள்தான் கிடைத்தன. அதில் பலகோடி சொத்துகளை திருப்பதி கோவிலுக்கு கொடுத்து விட்டேன்.
இப்போது நான் சென்னையில் உள்ள என் தங்கையுடன் வசிக்கிறேன்.’’
இவ்வாறு காஞ்சனா கூறினார்.

courtesy:https://www.dailythanthi.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,