மீண்டும் இந்தியா.. HSBC-யின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா
உலகின் முன்னணி வங்கி மற்றும் நிதி மேலாண்மை நிறுவனமான ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தனது சீன ரீடைல் வெல்த் மேனேஜ்மென்ட் வர்த்தகத்திற்கு அதிகளவிலான ஊழியர்களை நியமித்து வரும் இதே வேளையில் இந்தியாவில் மீண்டும் தனது தனியார் வங்கி சேவைகளைத் துவங்குவதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஆசியா முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், சொத்து மேலாண்மைக்கு முதன்மையாக விளங்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்க்ஸ் ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தற்போது சிஇஓ நியோல் குவின் தலைமையில் இயங்கி வரும் நிலையில், ஆசிய சந்தையின் வெல்த் மற்றும் பர்சனல் பேங்கிங் சேவையில் சுமார் 3.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய வெல்த் மேனேஜராக உருவெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக மதிப்புடைய பங்குகளை வைத்திருப்பதாலும், ஹெச்எஸ்பிசி தனது வர்த்தகத்தை மீண்டும் இந்தியாவிற்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
தனியார் வங்கி சேவை பிரிவில் இருந்து 2015ல் இந்தியாவை விட்டு வெளியேறிய ஹெச்எஸ்பிசி தற்போது ஏற்பட்டு உள்ள வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளைப் பார்த்து மீண்டும் வெல்த் மற்றும் பர்சனல் பேங்கிங் சேவையை இந்தியாவில் துவங்குவதற்கான வாய்ப்புகளைத் தீவிரமாகத் தேடி வருகிறது
வெல்த் மற்றும் பர்சனல் பேங்கிங் ஹெச்எஸ்பிசி-யின் வர்த்தக விரிவாக்கம் குறித்து வெல்த் மற்றும் பர்சனல் பேங்கிங் தலைவர் Nuno Matos கூறுகையில், சீனாவில் மிகப்பெரிய வெளிநாட்டு வங்கியாக ஹெச்எஸ்பிசி திகழும் நிலையில், வர்த்தக வாய்ப்பை பிற நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்
மேலும் ஹெச்எஸ்பிசி-யின் 4 முக்கிய அதிகாரிகளில் ஒருவர் வர்த்தக விரிவாக்கத்திற்காக லண்டனில் இருந்து ஹாங்காங் செல்ல உள்ளார். மேலும் தனியார் வங்கி சேவை பிரிவில் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம் என்றும் Nuno Matos கூறியுள்ளார்
ஆசிய சந்தை ஹெச்எஸ்பிசி லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் வெல்த் மற்றும் பர்சனல் பேங்கிங் பிரிவில் சுமார் 44 சதவீதம் அதாவது சுமார் 22 பில்லியன் டாலர் வர்த்தகத்தை ஆசிய சந்தையில் இருந்து தான் பெறுகிறது.
Comments