ரயில் பயணிகள் கவனத்திற்கு – ஸ்மார்ட்போன் மூலமாக IRCTC டிக்கெட் புக் செய்வது எப்படி

 


ரயில் பயணிகள் கவனத்திற்கு – ஸ்மார்ட்போன் மூலமாக IRCTC டிக்கெட் புக் செய்வது எப்படி


RCTC பயனர்களுக்கு ரயில்வே துறை பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட் போனில் வீட்டிலிருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் எப்படி டிக்கெட் புக் செய்வது என்பது பற்றிய முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

IRCTC டிக்கெட்:

நாடு முழுவதும் மக்கள் பெரும்பாலானோர் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். ஏனெனில் ரயில் பயண டிக்கெட் விலை குறைவு என்பதனாலும், உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதனாலும் மக்கள் இதனை தேர்வு செய்கின்றனர். அதனை தொடர்ந்து ரயில்வே துறையும் பயணிகளுக்கு ஏற்றார் போல் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ரயில் டிக்கெட்டுகளை ஸ்மாட்போன் மூலம் புக் செய்யும் வசதியை இரயில்வே துறை அறிமுகம் செய்தது. அதற்காக ரயில்வே துறைக்கு என்று பிரத்யேக மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மொபைல் செயலியின் மூலம் டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் கேன்சலேஷன் மற்றும் இரயில் நேரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை பயணிகள் தெரிந்து கொள்ள முடியும். இந்த அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மொபைல் செயலியில் உங்களது விபரத்தை பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு ரயில் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்றால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இப்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான வழிமுறைகள்:
  • முதலில் ஸ்மார்போனில் பதிவேற்றம் செய்துள்ள IRCTC மொபைல் செயலியை திறக்க வேண்டும். பின்னர் அதனை லாகின் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
  • பின்னர் தோன்றும் பக்கத்தில் உள்ள ‘Train Ticketing Section’ என்ற மெனுவை தேர்வு செய்து ‘Plan My Booking’ என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • தோன்றும் பக்கத்தில் பயண தேதி, ரயில், இடம் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து Search பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அவ்வாறு கொடுத்த பின்பு ரயில்களின் பட்டியல் தோன்றும் அதில் உங்களுக்கு விருப்பமான ரயிலை தேர்வு செய்து பயணிகளின் விபரங்களை சேர்க்க வேண்டும். நீங்கள் மட்டும் என்றால் உங்களது விபரம் மட்டும் போதுமானது.

  • கொடுத்த விபரங்கள் அனைத்தும் சரிதானா என்று Review Journey Details என்பதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
  • இந்த அனைத்து வேலைகளும் முடிவடைந்த பின் பயண கட்டணம் செலுத்துவதற்கு Proceed to Pay என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் மொபைல் வாலட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, Paytm, UPI மற்றும் Net Banking மூலம் பணம் செலுத்தலாம்.
  • பணம் செலுத்திய பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு PNR, ரயில் எண், பெட்டி எண், பயணத் தேதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய மெசேஜ் வரும். அதனை வைத்து நீங்கள் உங்களது ரயில் பயணத்தை தொடங்கலாம்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை