UIDAI : மொபைல் இருந்தால் போதும்! ஆதார் கார்டில் வந்துள்ள சூப்பர் அப்டேட்
UIDAI : மொபைல் இருந்தால் போதும்! ஆதார் கார்டில் வந்துள்ள சூப்பர் அப்டேட்
ஆதார் அட்டை சேவைகளை இப்போது எஸ்எம்எஸ் வழியாகவே பெறமுடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் எளிய முறையில் ஆதார் கார்டு பற்றிய தகவல்களை பெறுவதற்கும், அப்டேட் செய்வதற்கும், UIDAI பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு நபரின் தனித்துவமான 12 இலக்க ஆதார் எண், பல்வேறு அரசு மற்றும் அரசு-அல்லாத பணிகளுக்கு முக்கியமான அடையாளமாக செயல்பட்டு வருகிறது. எனவே, ஆதார் கார்டு பற்றிய தகவல்களையும், அப்டேட்களையும் எளிமையாக மேற்கொள்ளும் வசதியை UIDAI தனது அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் வழங்குகிறது.
இருப்பினும், இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களுக்கும் இணையம் வசதி இன்னும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 7,200 கிராமங்களுக்கு 4ஜி இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், அதை முழுமையாக செயல்படுத்துவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். இணைய வசதி இல்லாத கிராமப்புறங்களில் ஆதார் அட்டை சேவைகளை இப்போது எஸ்எம்எஸ் வழியாகவே பெறமுடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
இனி நீங்கள் ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமானால், ஆதார் வலைதளத்தையோ அல்லது ஆதார் செயலியையோ டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் சாதாரண இணைய வசதி மொபைல் போன் பயன்படுத்தி உங்களுடைய ஆதார் சேவைகளை பெற முடியும்
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தற்போது விர்ச்சுவல் ஐடி உருவாக்கம், விர்ச்சுவல் ஐடி ரிட்ரீவல், ஆதார் லாக் மற்றும் அன்லாக் சேவைகளை SMS வழியாகப் பெறலாம். SMS லாக்கிங் மற்றும் அன்லாக்கிங் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம். நீங்கள் இந்த சேவைகளைப் பெற, பதிவு செய்யப்பட்ட மொபைல் என்னிலிருந்து 1947 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு செய்தி அனுப்பலாம்
விர்ச்சுவல் ஐடி உருவாக்குவது எப்படி?
இந்த அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் மொபைலில் இருந்து GVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை டைப் செய்து, 1947 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.
OTP-ஐ இரண்டு வழிகளில் பெற முடியும். முதலாவது உங்கள் ஆதார் எண் பயன்படுத்தலாம். அல்லது நீங்கள் உருவாக்கிய VID – Virtual ID மூலம் பெறலாம்.
விர்ச்சுவல் ஐடியைப் பெற, RVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை டைப் செய்து, 1947 க்கு SMS அனுப்பவும். ஆதார் எண் வழியே OTP-ஐ பெற, GETOTP டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை உள்ளிட்டு, 1947 எண்ணுக்கு SMS அனுப்பவும். உங்கள் VID வழியே OTP ஐப் பெற, GETOTP டைப் செய்து இடைவெளி விட்டு, உங்களின் விர்ச்சுவல் ஐடியின் கடைசி 6 இலக்க எண்ணை உள்ளிட்டு ஹாட்லைன் எண்ணுக்கு அனுப்பவும்.
SMS வழியே ஆதார் கார்டை லாக் அல்லது அன்லாக் செய்வது எப்படி?
* நீங்கள் ஆதார் எண் பயன்படுத்தினால், முதல் SMS ஆக, OTP-ஐ பெற, GETOTP டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை உள்ளிட்டு, ஹாட்லைன் நம்பருக்கு அனுப்பவும்.
* இரண்டாவதாக, ENABLEBIOLOCK டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை உள்ளிட்டு, இடைவெளி விட்டு 6 இலக்க OTP-ஐ உள்ளிட்டு ஹாட்லைன் நம்பருக்கு அனுப்பவும்.
* நீங்கள் VID பயன்படுத்தினால், உங்கள் VID வழியே OTP-ஐ பெற, செய்து இடைவெளி விட்டு, உங்களின் விர்ச்சுவல் ஐடியின் கடைசி 6 இலக்க எண்ணை உள்ளிட்டு ஹாட்லைன் எண்ணுக்கு அனுப்பவும்.
* அடுத்து, ENABLEBIOLOCK டைப் செய்து இடைவெளி விட்டு, உங்களின் விர்ச்சுவல் ஐடியின் கடைசி 6 இலக்க எண்ணை உள்ளிட்டு இடைவெளி விட்டு 6 இலக்க OTP-ஐ உள்ளிட்டு ஹாட்லைன் நம்பருக்கு அனுப்பவும்.
இதை பற்றி கூடுதல் விவரங்களாய் UIDAI-ன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Comments