சரியாக 10 நிமிடத்தில் சூப்பரான கார சட்னி ரெசிபி

 சரியாக 10 நிமிடத்தில் சூப்பரான கார சட்னி ரெசிபி




தோசைக்கு தொட்டுக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெஸ்ட் காரச் சட்னி ரெசிபியை தான் இன்னிக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இட்லிக்கும் இந்த சட்னியை தொட்டுக் கொள்ளலாம். இருந்தாலும் மொரு மொரு தோசைக்கு இந்த காரச் சட்னி ரொம்ப பொருத்தமா இருக்குங்க. பத்து நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே காரசாரமாக சிம்பிள் கார சட்னி ரெசிபி உங்களுக்காக.


முதலில் மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள்

. அதில் சீரகம் – 1 ஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 பல், ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டிய பெரிய வெங்காயம் – 1, தோல் உரித்த பூண்டு பல் – 10, பெரிய சைஸ் பழுத்த தக்காளி – 1, சிறிய துண்டு – வெல்லம், வரமிளகாய் – 10 லிருந்து 12. மிளகாயை மட்டும் உங்கள் காரத்திற்கு ஏற்ப வைத்துக் கொள்ளுங்கள். இந்த எல்லா பொருட்களையும் விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.


இந்த விழுதை மிக்ஸி ஜாரில் அரைக்கும் போது வெங்காயம் தக்காளியிலேயே தண்ணீர் விடும். தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. இந்த விழுது அப்படியே இருக்கட்டும். 

இந்த விழுதை தாளித்து விட வேண்டும்.


அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைத்துக்கொண்டு, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, தாளித்து மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் சட்னி விழுதை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, சரியாக எட்டு நிமிடங்கள் நன்றாக வதக்கி, அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு பரிமாறினால் சூப்பரான காரசாரமான கார சட்னி தயார்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி