காரசாரமான வேர்கடலை சட்னி 10 நிமிடத்தில்

 காரசாரமான வேர்கடலை சட்னி 10 நிமிடத்தில் 

இந்த காரசாரமான வேர்க்கடலை சட்னி ஒரு வரப்பிரசாதமாக நிச்சயம் இருக்கும். ஒரே மாதிரியான சட்னி வகைகளை செய்து கொடுக்கும் பொழுது காலை உணவு முழுமை பெறுவதில்லை. ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு வேர்க்கடலை கார சட்னியை நீங்களும் அரைத்துக் கொடுத்துப் பாருங்கள்! அடிக்கடி உங்கள் வீட்டில் இருப்பவர்களை கேட்கத் தூண்ட செய்யும் இந்த வேர்க்கடலை சட்னி நாமும் எப்படி செய்யலாம்

வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

 சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வேர்கடலை – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, வர மிளகாய் – 2, பூண்டு பல் – 2.

வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்: முதலில் அடுப்பைப் பற்ற வைத்ததும் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். நீங்கள் பச்சை வேர்க்கடலை எடுத்தால் பருப்பு வகைகளுடன் வேர்க்கடலையையும் சேர்த்து வறுக்க வேண்டும். ஏற்கனவே வறுத்த வேர்கடலை என்றால் பருப்பு வகைகள் நன்கு வறுபட்டதும் கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி இரண்டும் நன்கு மசிய வதங்கி வர தேவையான அளவிற்கு உப்பை தூவி கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நன்கு வதக்கினால் வெங்காயம், தக்காளி மசிந்து விடும். அதன் பிறகு நறுக்கிய மல்லித்தழை சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். ஏற்கனவே தாளித்து செய்ததால் தாளிப்பு கொடுக்காமல் கூட நாம் சட்னியை அப்படியே தொட்டு கொண்டு சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,