1.77 கோடி மரக்கன்றுகள்
1.77 கோடி மரக்கன்றுகள் நட அரசு ரூ.39 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் தற்போதைய வனப்பரப்பு 23.8 சதவீதமாக உள்ளது. அதை 33 சதவீதமாக உயர்த்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழ்நாடு பசுமை இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், உள்நாட்டு மரக்கன்றுகளை, நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிலங்கள், பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், தொழிற்பகுதிகள், படுகை பகுதிகளில் நட முடிவு செய்யப்பட்டது.நடப்பாண்டு முதல் 2030 - 31ம் ஆண்டுக்குள், வனப்பரப்பை அதிகரிக்க, 265 கோடி உள்நாட்டு மரக்கன்றுகளை, பொது இடங்களில் நட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பாண்டு 12 ஆயிரத்து 350 ஏக்கர் நிலப்பரப்பில், 47 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மரக்கன்றுகளை உருவாக்கவும், அவற்றை நடவும் 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், 12 ஆயிரத்து 350 ஏக்கர் நிலப்பரப்பில், 1.30 கோடி மரக்கன்றுகள் நட 17.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Comments