சசி கபூர்

 ஹிந்தி சாக்லேட் பாய் சசி கபூர்

😢
ஹிந்தி நடிகர் பிரித்விராஜ் கபூரின் மக னாக 18-3-1938 அன்று கொல்கத்தா நகரில் பிறந்த சசி கபூர், புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களிலும், புராணப் படங்களில் நடிக்க தொடங்கிய சசிகபூர் படிப்படியாக முன்னேறி இந்திப் பட கதாநாயகனாகவும், இணை நாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1950-ஆம் ஆண்டுகளில், துணை இயக்குநராக பல படங்களில் சசி கபூர் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1961-ஆம் ஆண்டில், "தர்மபுத்ரா' எனும் படத்தில் கதாநாயகனாக சசி கபூர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்தே 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் சுமார் 116 திரைப்படங்களில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார்.
அதில் "தீவார்', "கபி கபி', "நமக் ஹலால்', "காலா ஃபாதர்' போன்ற திரைப்படங்கள், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக, ஹிந்தி திரையுலகில் கடந்த 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவற்றில் நாயகனாக அவர் நடித்திருந்தார். இதனால் காதல் சின்னமாகவே அவர் ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.

அமிதாப் பச்சனுக்கு இணையாக இவர் நடித்த இந்தித் திரைப்படங்கள் தீவார், தோ அவுர் தோ பாஞ்ச், நமக் ஹலால் ஆகியன இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தன.
தவிர பல பிரிட்டிஷ் படங்களிலும் "சேக்ஸ்பியர்வாலா" போன்ற மெர்ச்சென்ட் ஐவரி தயாரித்த ஆங்கிலப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அவரது கலையுலக சேவையை பாராட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது அளித்து மத்திய அரசு கௌரவித்தது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டது.
3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,