நாவலர் சோமசுந்தர பாரதியார்

 நாவலர் சோமசுந்தர பாரதியார்





❤ மறைந்த தினமின்று🐾😢
இந்தியாவின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்; அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்; தமிழர்களின் தாழ்நிலை அகற்றி, வாழ்வு உயரப்பாடுபட்டவர்; தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும் எழுதித் தமிழின் பெருமையைத் தரணியறியச் செய்தவர்; பேச்சிலும் எழுத்திலும் ‘தமிழ் மரபு’ இது, - ‘அயல் மரபு’ இது என விளக்கியவர்;
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். அரண்மனைக்கு வந்திருந்த ஈழப்புலவர் ஒருவர், இவர்கள் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.
தென்னகத்தில், தாய்த்தமிழ் காக்க நிகழ்ந்த மொழிப் போரில், முன்னின்று போராடியவர். ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனாரோடு சேர்ந்து தேச விடுதலைத் தீக்கொழுந்தைத் தென்னாடெங்கும் எரியவிட்டவர்; அவர் தோற்றுவித்த கப்பல் கழகத்தின் செயலராக இருந்து கருத்தோடு செயல்பட்டவர்; ‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, 3-வதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடியவரிர்.
ஒத்துழையாமை இயக்கத்திலும், தீண்டாமை ஒழிப்பிலும் அண்ணல் காந்தியடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றியவர்;
காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார்.
தம் குடும்பத்திலிருந்து ஏழு பேரைச் சிறைக்கு அனுப்பி, இந்திய விடுதலை வரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர்! இப்படியெல்லாம், பல்வேறு புகழ்மொழிகளுக்குப் பாத்திரமானவர்தான் ‘பசுமலை நாவலர்’ சோமசுந்தர பாரதியார்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,