மிஸ் யுனிவர்ஸ்; 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி அர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்று அசத்தல் -

 மிஸ் யுனிவர்ஸ்; 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி அர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்று அசத்தல் -






எய்லாட்: இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் இந்த போட்டியில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட அர்னாஸ் கவுர் சாந்து (21) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு மெக்ஸிகோவை சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியாமெசா கிரீடத்தை சூட்டினார்


பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
எய்லட்,
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார். ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.
இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,