உலகளவில் 300 கோடி மக்கள் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லை

 

உலகளவில் 300 கோடி மக்கள் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லையாம்...


வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதம் பேர் இணைய வசதி இணைப்பே பெறவில்லை என்று ஐ.நா.-வின் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் உலகில் இணையத்தளம் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இணையத்தளம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது.

உலகளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் இணையத்தளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இணையத்தளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 4.1 பில்லியனாக இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காலத்தில், இந்த ஆண்டு 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.

உலகளவில் இப்படிப்பட்ட வளர்ச்சி இருக்கும்போதிலும், உலக மக்கள் தொகையில் சுமார் 300 கோடி பேர் இன்னும் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லை என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதம் பேர் இணைய வசதி இணைப்பே பெறவில்லை என்று ஐ.நா.வின் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐ.டி.யு.) மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.டி.யு. பொதுச் செயலாளர்  ஹவுலின் ஜாவோ கூறுகையில், "உலகளவில் விடுப்பட்ட 300 கோடி மக்களுக்கும் இணைய வசதி கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதில் யாரும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறினார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்