தமிழ் புத்தாண்டு மாற்றமா?

 

தமிழ் புத்தாண்டு மாற்றமா? ராமதாஸ் ஆதரவு-அண்ணாமலை எதிர்ப்பு




தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசின் கோரிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அகற்றப்பட்ட நிலையில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் தற்போதைய அரசுக்கு உள்ளதாக ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தை திங்கள் பிறக்க இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய சட்டத்தை நிறைவேற்றி ஆளுநரின ஒப்புதலையும் பெற வேண்டும். எனவே, தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், தை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் ராமதாசின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.  தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,