'டான்'.
சிபி சக்ரவர்த்தி டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைஞ்சு இப்படத்தைத் தயாரிச்சு வாராய்ங்க.
இதுலே பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். இதில் கெஸ்ட் ரோலில் கெளதம் மேனனும் நடிச்சிருக்கார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வாராய்ங்க.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே இதன் டப்பிங் பணிகளும் பார்ட் பார்ட்டா நடந்து வந்துச்சு. இந்நிலையில் இன்னிக்கு (25.12.21) ‘டான்’ வில்லன் எஸ்.ஜே. சூர்யா தன்னோட ட்ப்பிங் போர்சனி முடிச்சிட்டதா சேதி அனுப்பி இருக்கார்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்காய்ங்க
Comments