சத்யராஜ் நடித்திருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்

 சத்யராஜ் நடித்திருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படம் வரும் டிசம்பர் 31ல் ரிலீஸ்!
ஹனி பீ பட நிறுவனத்தின் சார்பில் புரொடியூசர் சஜீவ் மீரா சாகிப் ராவுத்தர் தயாரிச்சிருக்கும். இப் படத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், மதுசூதன் ராவ், ஹரீஷ் உத்தமன் மற்றும் ரேணுகா ஆகியோர் நடிச்சிருக்காய்ங்கர்.
அறிமுக இயக்குநரான தீரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செஞ்சிருக்கார்.
சென்சார் எல்லாம் வாங்கிய நிலை ரிலீஸூக்கு தயாரன நிலையில் இப்படத்தை வெளியிட ஆலப்புழா நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பிச்சதா ஒரு சேதி வந்துச்சு.
இது குறிச்சு இப்பட சம்பந்தப்பட்ட இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே.கே.சுதாகரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினப்போ, “2019ஆம் வருசம் பிப்ரவரி மாதம் இந்த படம் துவங்கப்பட்டபோது இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் சஜீப்பின் ஹனி பீ புரொடக்சன்ஸ் நிறுவனமும், என்னுடைய இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக ஒப்பந்தம் செஞ்சிருந்தோம். அப்போ இப் படத்தில் நான் இணை தயாரிப்பாளராகக் குறிப்பிடப்பட்டிருந்தேன்.படத்தின் துவக்கத்தில் மிக அதிகமாக என்னுடைய இன்பினிட்டி நிறுவனமே பணத்தை முதலீடு செய்து படத்தைத் தயாரிச்சு முடிச்சு.
இந்த நிலையில் என்னிடம் சொல்லாமலேயே படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரையும், என் நிறுவனத்தின் பெயரையும் நீக்கிட்டு தன்னுடைய பெயரையும், தன் நிறுவனத்தின் பெயரையும் மட்டுமே தயாரிப்பாளர் சஜீப் கொடுத்துள்ளார். இது குறிச்சு நாங்க அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அவர் மீது கோர்ட்டில் சிவில் வழக்கும், மோசடி செய்ததற்கான கிரிமினல் வழக்கையும் பதிவு செய்தோம். இந்த வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருது. இந்த நிலையில் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்திற்கு சென்சார் சான்றிதழைப் பெற்றுவிட்டு அல் டாரீஸ் என்ற பட நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளர் சஜீப் விற்பனை செய்துவிட்டார். மேலும் இந்தப் படம் டிசம்பர் 25 அன்று வெளியாவதாக வெளி வந்த செய்தியைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டோம். இதனால், ஆலப்புழா நீதிமன்றம் இந்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தினை தியேட்டர்கள், ஓடிடியில் மட்டுமின்றி எந்த வகையிலும் வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவினை பிறப்பிச்சிது” அப்ப்டீன்னார்.
இதை அடுத்து கடந்த நாலைந்து நாட்களாக மீண்டும் மேற்படி இன்பினிட்டி & ஹனி பீ டீம் நடத்திய பேச்சு வார்த்தை சுமூகமா முடியற ஸ்டேஜில் இருப்பதால் படத்தை திட்டமிட்டப்படி 31ல் ரிலீஸ் செய்ய 11;11 டீம் ஆயத்தமாயிட்டாங்களாம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி