சர்., கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்

  சர்., கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்





💐 (Kariamanickam Srinivasa Krishnan, கே. எசு. கிருட்டிணன்), டிசம்பர் 4 _1898 – சூன் 14 _1961) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார். ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார். ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி